• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-31 23:36:44    
திபெத்தில், தன்னாட்சி அமைப்பு முறை

cri

தேசிய இனப் பிரதேச தன்னாட்சி அமைப்பு முறை, உள் நாட்டு தேசிய இன பிரச்சினையைத் தீர்ப்பதற்காக சீன அரசு மேற்கொண்டுள்ள ஒரு அடிப்படை அரசியல் அமைப்பு முறையாகும். சீனாவின் அடிப்படை சட்டமான "அரசியல் அமைப்பு சட்டத்தில்" இவ்வமைப்புமுறை பிரதிபலிக்கின்றது. அன்றி, இதற்கென வகுக்கப்பட்ட "தேசிய இன பிரதேச தன்னாட்சி சட்டம்" இதற்கு உத்தரவாதம் அளிக்கின்றது. அவ்வமைப்பு முறையின் கீழ், பல்வேறு சிறுபான்மை தேசிய இனங்கள் குழுமி வாழும் இடங்களில் பிரதேச தன்னாட்சியை நடைமுறைப்படுத்துகின்றன. அங்கு தன்னாட்சி நிறுவனங்கள் அமைக்கப்படுகின்றன. சட்டமியற்றல் உரிமை, பொருளாதார வளர்ச்சி உரிமை, சிறுபான்மை தேசிய இன ஊழியர்களைப் பயிற்றுவித்து பயன்படுத்தும் உரிமை, கல்வி வளர்ச்சி உரிமை, தேசிய இனப் பண்பாட்டு உரிமை, மொழி எழுத்துகளின் பயன்பாட்டு மற்றும் வளர்ச்சி உரிமை முதலியவற்றை இந்நிறுவனங்கள் அனுபவிக்கின்றன.

திபெத் தன்னாட்சிப் பிரதேசம், சீனாவில் தேசிய இன பிரதேசத் தன்னாட்சி நடைமுகைக்கு வந்துள்ள 5 மாநில நிலை தன்னாட்சி இடங்களில் ஒன்றாகும். அன்றி, சீனாவில், திபெத் இனம் முக்கியமாக இடம்கொள்ளும் மாநில நிலை தேசிய இனத் தன்னாட்சி இடமும், இதுவாகும். லே ஜிங் பணிபுரியும் திபெத் தன்னாட்சிப் பிரதேச மக்கள் பேரவை, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் உள்ளூர் தேசிய அதிகார நிறுவனம். இது மட்டுமின்றி, தேசிய இனப் பிரதேச தன்னாட்சி மேற்கொள்ளப்படும் சட்டப்படியான நிறுவனமும் ஆகும். திபெத்தின் பல்வேறு தேசிய இன மக்கள், உரிமையாளராக செயல்படும் உரிமைக்கு முக்கிய உத்தரவாதம் ஆகும். திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மக்கள் பேரவை, திபெத் மக்கள் சொந்தமாக தமது தேசிய இன விவகாரங்களை நிர்வகிக்க உதவுகிறது என்று லே ஜிங் சொன்னார்.

திபெத் தன்னாட்சிப் பிரதேச மக்கள் பேரவையில் திபெத் இனம் மற்றும் இதர சிறுபான்மை தேசிய இனங்களின் பிரதிநிதிகள் மொத்த பிரதிநிதிகளில் 70 விழுக்காட்டுக்கு மேலானவர்கள். இன்னும் கணிசமான விவசாயிகள் ஆயர்கள் இதர உழைப்பாளிகள் இருக்கின்றனர். தேசிய இன மத துறையின் மேல்மட்ட நாட்டுப்பற்று பிரமுகர்கள் உள்ளனர். புகழ் பெற்ற புத்த மத பெரியார்கள், வாழும் புத்தர்கள், மற்றும் நாடு திரும்பிய திபெத் இன உடன்பிறப்புகள் அவர்களில் அடங்குவர். நிபுணர்கள், அறிஞர்கள், பிரமுகர்கள் ஆகியோர் படிப்படியாக அதிகரித்து வருகின்றனர்." என்றார், அவர்.