• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-01 09:20:53    
நானும் சீன வானொலி நிலையமும் பற்றிய விளக்கம்

cri
கிளீட்டஸ்.....கலை இன்றைய நிகழ்ச்சியில் என்ன முக்கியமாக சொல்கின்றோம்.

கலை......கிளீட்டஸ் போன முறை கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் "நானும் சீன வானொலி நிலையமும்"என்னும் பொது அறிவு போட்டி துவக்குவது பற்றி சொன்னது இன்னும் ஞாபகத்தில் உள்ளதா?

கிளீட்டஸ்.....ஆமாம். போன முறை இது பற்றி நாங்கள் இருவரும் நேயர்களுக்கு தெள்ள தெளிவாக விளக்கி கூறினோம். இப்போது வேறு எதாவது தகவல் உண்டா?

கிலை.....உண்டு. நாம் எப்போது அறிவு போட்டிக்கான வினாத் தாள்களை நேயர்களுக்கு அனுப்பினோம்?தெரியுமா?

கிளீட்டஸ்......மே திங்களின் முதல் வாரத்தில் அனுப்பினோம். அல்லவா?

கலை.....ஆமாம். இப்போது அனுப்பிய வினாத் தாள்கள் அனைத்தும் நேயர்களிடம் வந்து சேர்ந்துவிட்டதாக அறிகிறோம். ஆனால் பல நேயர்கள் தொலை பேசி மூலம் அல்லது இமேல் மூலம் வினாத்தாள்கள் போதாது என்ற தகவலை எங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

கிளீட்டஸ்.....அப்படியா. எத்தனை வினாத்தாள்களை நாம் நேயர்களுக்கு அனுப்பினோம்?

கலை....மொத்தமாக 2 லட்சம் வினாத்தாள்களை அச்சடித்தோம். கையில் இப்போது உள்ள ஐயாயிரம் வினாத்தாள்கள் தவிர மற்ற அனைத்து வினாத்தாள்களையும் அனுப்பிவிட்டோம்.

கிளீட்டஸ்....பல நேயர்கள் மேலும் கூடுதலான வினாத்தாள்களை தேவை என்ற தகவல் தொலை பேசி மூலம் அறிவித்துள்ளனர்.

கலை....ஆமாம். நீங்கள் பாருங்கள். 30 பள்ளிப்பட்டி பி ஆர் சுப்பிரமனியன், மனமேடு எம் தேவராஜா சேந்த மங்கலம் எஸ் எம் ரிவிச்சந்திரன் முதலிய நேயர்கள் தொலை பேசி மூலம் மேலும் கூடுதலான வினாத்தாள்களை அனுப்புமாறு வேண்டிகொண்டனர்.

கிளீட்டஸ்.....இந்த நிலைமையில் நாம் என்ன செய்ய வேண்டும்.

கலை......முதலில் நேயர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கூடுதலான வினாத்தாள்களை மீண்டும் அச்சிட்டு அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.

இரண்டாவது முயற்சி என்றால் இப்போது இணையத்தில் பொது அறிவு போட்டிக்கான 4 கட்டுரைகள் அடுத்தடுத்து கேள்வியும் பதிலும் பகுதியில் வெளியிடப்பட்டு வருகின்றன. அறிவு போட்டி தொடர்பான எட்டு வினாக்கள் ஏற்கனவே இணையத்தின் கேள்வியும் பதிலும் பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது. வீட்டில் கணிணி வசதியிருந்த நேயர்களுக்கு வினாத்தாள்கள் தேவைபட்டால் நேரடியாக கணிணி மூலம் இந்த எட்டு வினாக்களை பதிவிறக்கம் செய்யலாம் அல்லது பிரதி எடுக்கலாம். அல்லது எத்தனை வினாத்தாள்கள் தேவை என்ற தகவல் கடித மூலம் அல்லது ஈமேல் மூலம் எமக்கு தெரிவிக்கலாம்.

கிளீட்டஸ்.....அப்படி என்றால் நமது மின்னஞ்சல் முகவரி இவற்றை சொல்லுங்களேன்.

கலை.....எங்கள் ஈமேல் முகவரி பின் வருமாறு. tamil@cri.com.cn.

கிளீட்டஸ்.....இந்த முகவரியை பயன்படுத்தி தகவல் அனுப்ப முடியுமா?

கலை.....கண்டிப்பாக முடியும். வாணி இப்போது கடிதங்களை கையாளும் பொறுப்பு ஏற்றுள்ளார். நாள்தோறும் அவர் ஈமேல் கடித பெட்டியை திறந்து தகவல்களை சேகரிக்கிறார். தகவல் கிடைத்த பின் என்னிடம் சொல்வார். ஆகவே நேயர்கள் தாளாரமாக தகவல்களை அனுப்புங்கள்.

கிளீட்டஸ்.......தகவல் அனுப்புவது தவிர, நேயர்களுக்கு தாங்களே வேறு வழி மூலம் வினாத்தாள்களை பெறலாமா?

கலை......வேறு வழியும் உண்டு. அதாவது நேயர் மன்றத்தின் ஏற்பாட்டில் மொத்தமாக வினாத்தாள்களை அச்சிடலாம். முன்பு பொது அறிவு போட்டிகளில் கலந்து கொண்ட அனுபவங்களை பெற்ற மன்ற தலைவர்களுக்கும் செயலாளர்களுக்கும் இது பற்றி தெரியும்.

கிளீட்டஸ்......அப்படியிருந்தால் வினாத்தாள்கள் பற்றாக்குறை பிரச்சினை தீர்க்கப்படும்ம். அல்லவா?

கலை......ஆமாம். சில நேயர்கள் மன்றங்கள் வழக்கத்தின் படி பொது அறிவு போட்டி நடைபெறும் நடுவில் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தி பொது அறிவு போட்டியின் வினாக்கள் பற்றி விளக்கம் கூறுவார்கள்.

கிளீட்டஸ்.....அவர்கள் கூட்டம் நடத்தும் போது உங்கள் குரல் நிகழ்ச்சிக்காக கூட்டத்தின் விடயங்களை பதிவு செய்யலாமா?

கலை.....ஆமாம். திருச்சி நேயர் மன்றம் இத்தகைய சிறந்த வழக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது. ஒவ்வொரு முறை மன்ற கூட்டம் நடத்தும் போது உறுப்பினர்களின் பேச்சை பதிவு செய்து உங்கள் குரல் நிகழ்ச்சிக்காக திருச்சி நேயர் மன்ற தலைவர் எம் தேவராஜா, துணை தலைவர் ஜி பிரபாகரன் இருவரும் அனுப்புகின்றார்கள். ஆகவே உங்கள் குரல் நிகழ்ச்சியில் அவர்களின் மன்ற உறுப்பினர்களின் குரல் அடிக்கடி கேட்கப்படுகிறது.

கிளீட்டஸ்.......மே திங்கள் 22ம் நாள் முதல் 25ம் நாள் வரை

"நானும் சீன வானொலி நிலையமும்" எனும் பொது அறிவு போட்டிக்கான 4 கட்டுரைகள் முதல் முறையாக ஒலிபரப்பபட்டன. அடுத்த முறை அதாவது இரண்டாவது ஒலிபரப்பு எப்போது ஏற்பாடு செய்கின்றோம். நாங்கள் இன்றைய வாய்ப்பை பயன்படுத்தி நேயர்களுக்கு அறிவிக்கலாமே.

கலை......உங்கள் யோசனை நல்ல யோசனைதான். வழக்கம் போல இரண்டாவது முறை நான்கு கட்டுரைகளை ஒலிபரப்புவது அடுத்த திங்களில் ஏற்பாடு செய்யப்படும். இந்த முறை ஏற்கனவேயுள்ள வழி முறையை பின்பற்றி செயல்படுகின்றோம்.

கிளீட்டஸ்.....அதவாது ஜுன் திங்கள் நடுப்பகுதியில் நான்கு கட்டுரைகளை ஒலிபரப்ப ஏற்பாடு செய்வோம்.

கலை.....ஆமாம். ஜுன் திங்கள் 12ம் நாள் முதல் 15ம் நாள் வரை இந்த நான்கு கட்டுரைகளை மீண்டும் ஒலிபரப்புவோம்.

கிளீட்டஸ்......நண்பர்களே கவனமாக இந்த கட்டுரைகள் மீண்டும் ஒலிபரப்பப்படும் தேதிகளை ஞாபகத்தில் பதிந்து வையுங்கள்.

கலை......நான் மீண்டும் சொல்கின்றேன். ஜுன் திங்கள் 12ம் நாள் முதல் 15ம் நாள் வரை நானும் சீன வானொலி நிலையமும் என்னும் பொது அறிவு போட்டிக்கான நான்கு கட்டுரைகளை ஒலிபரப்புவோம். கேட்க தவறாதீர்கள்.