வணக்கம்!தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் மீண்டும் மகிழ்ச்சியுடன் சந்தித்துள்ளோம்.
கடந்த முறை நாம் ஒரு புதிய உரையாடலை படித்தோம். அந்த உரையாடல் ஓம்புநருக்கும் விருந்தினருக்குமிடையிலான ஒரு உரையாடலாகும். தமிழ் மூலம் சீனம் என்ற நூலின் 27வது பக்கத்தின் மேல் பகுதியில் உள்ளது. இப்பொழுது அந்த உரையாடலை மீண்டும் ஒரு முறை பார்க்கின்றோம்.
WO KE YI JIN LAI MA?
QING JIN, QING JIN!
WO ZUO ZHE ER, XING MA?
BIE KE QI, QING ZUO!
இந்த உரையாடலின் தமிழாக்கம் வருமாறு
WO KE YI JIN LAI MA?
நான் உள்ளே வரலாமா?
QING JIN, QING JIN!
வாருங்கள்! வாருங்கள்!
WO ZUO ZHE ER, XING MA?
நான் இங்கே உட்காரலாமா?
BIE KE QI, QING ZUO!
தாராளமாக, கூச்சப்பட வேண்டாம், உட்காருங்கள்!
இந்த உரையாடலில் KE YI, BIE ஆகிய மூன்று சொற்களை மாற்று, முறையே NENG, XING, KE YI ஆகிய மூன்று சொற்களைப் போட்டால் இந்த உரையாடலில் சற்று மாற்றம் ஏற்படும். ஆனால் பொருள் ஒன்று.
இப்பொழுது நாம் பார்க்கின்றோம்.
WO NENG JIN LAI MA?
QING JIN, QING JIN!
WO ZUO ZHE ER, KE YI MA?
BU YAO KE QI, QING ZUO!
இந்த உரையாடல் மாற்றப்பட்ட பிறகு, பொருளில் ஏதாவது வித்தியாசம் உண்டா? ஒன்றும் இல்லை.
எனவே, நாங்கள் ஏற்கனவே கூறியது போல, NENG, XING, KE YI போன்ற சொற்கள் பல இடங்களில் பரஸ்பரம் பாற்றப்படலாம்.
இப்பொழுது ஒரு சற்று நீளமான உரையாடலை பார்க்கின்றோம்.
NIN HAO, QING WEN, LI MING ZAI JIA MA?
MEI YOU, TA CHU QU LE. QING WEN, NIN GUI XING?
WO XING ZHANG, JIAO ZHANG HUA, WO SHI TA TONG SHI. WO KE YI JIN LAI MA?
DANG RAN KE YI, QING JIN, QING JIN!
WO NENG ZUO ZHE ER MA?
BIE KE QI, QING ZUO, QING ZUO!
XIE XIE!
இந்த உரையாடலை நீங்கள் புரிந்ததா? இது எல்லாம் நாம் ஏற்கனவே படித்துள்ளோம்.
ZAI JIA என்றால், வீட்டில் இருப்பது, TONG SHI என்றால் ஒரே பிரிவில் வேலை செய்பவர். CHU QU என்றால் வெளியே போவது என்பது பொருள்.
இப்பொழுது, இந்த உரையாடலின் தமிழாக்கத்தை தருகின்றோம்.
NIN HAO, QING WEN, LI MING ZAI JIA MA?
வணக்கம், தயவு செய்து, லீ மிங் வீட்டில் இருக்கிறாரா?
MEI YOU, TA CHU QU LE. QING WEN, NIN GUI XING?
இல்லை, அவர் வெளியே போனார். தயவு செய்து உங்கள் பெயர் என்ன?
WO JIAO ZHANG HUA, WO SHI TA TONG SHI. WO KE YI JIN LAI MA?
என் பொயர் சாங் ஹுவா, நான் அவருடைய சக பணியாளர். நான் உள்ளே வரலாமா?
DANG RAN KE YI, QING JIN, QING JIN!
கண்டிப்பாக, வாருங்கள், வாருங்கள்!
WO NENG ZUO ZHE ER MA?
நான் இங்கோ உட்காரலாமா?
BIE KE QI, QING ZUO, QING ZUO!
தாராளமாக, கூச்சப்பட வேண்டாம், உட்காருங்கள், உட்காருங்கள்!
XIE XIE!
நன்றி!
இன்று நாம் ஒரு சற்று நீளமான ஒரு உரையாடலை படித்துள்ளோம். ஆனால் கஷ்டமில்லை. நீங்கள் நன்றாக் பயிற்சி செய்தால் இந்த உரையாடலை கிரகித்துக்கொள்வது, அவ்வளவு கடினமில்லை. செய்வீர்களா!
|