குருகுலத்தில் தன் மகனைச் சேர்த்து விட்ட ஒருவன் மிகவும் பரிவோடு சொன்னான்.
"இந்தா பாரு மகனே! பள்ளியில கவனமா படிக்கணும். உன் வாத்தியாரு என்ன சொல்றாரோ அதைச் சொல்லு. என்ன செய்றாரோ அதை செய்யி. அவரை மாதிரியா வச்சுக்கோ. அப்போதான் நல்ல படிச்சு பெரிய ஆளாக முடியும்."
மகன் அப்படியே செய்தான். ஒரு தடவை ஆசிரியருக்கு அருகில் அமர்ந்து ஒரே மேசையில் உண்ண வேண்டியிருந்தது. அவர் சாப்பிட்ட போது சாப்பிட்டான். மது குடித்த போது குடித்தான். உணவுக் குச்சியை மேசைமீது வைத்த போது, இவனும் வைத்தான். தான் செய்வதை எல்லாம் செய்யும் மாணவனைக் கண்டு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. அடக்கமுடியாமல் சிரித்து வாட்டு தண்ணீர் குடித்தார். சிரித்தபடியே தண்ணீர் குடித்ததால் புரையேறி, பலமாகத் தும்மினார்.
உடனே மாணவனும் சிரித்தான். தண்ணீர் குடித்தான். ஆனால் தும்மல் மட்டும் வரவில்லை. என்னென்னவே. செய்தான். தும்ம முடியவில்லை. கடைசியில் எழுந்து நின்று மிகவும் பணிவாக,
"குருவே, ரொம்பக் கஷ்டமான வித்தை எல்லாம் கற்றுக் கொடுக்காதீங்க" என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.
மனைவியின் கவலை
ஒரு மனிதன் அளவுக்கு அதிகமாகக் குடித்து, உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டு, கனியாட்டம் போட்டதால் கடுமையாக நோய்வாய்ப்பட்டான். மருத்துவர் வந்து நாடி பிடித்துப் பார்த்தார்.
"கவலைப்பட வேண்டாம். பத்தியமா இருந்தால் குணமாயிரும். ஒரு மரத்தை ரெண்டு கோடரிகளால் வெட்டுவது போல, நீ ரெண்டு விஷயங்களை செய்யணும்" என்றார்.
"அப்படியா? சொல்லுங்க" என்றாள் பணிவோடு.
"ஒண்ணு, நீ மது குடிக்கிறதை ஒரேயடியாக நிறுத்திவிடணும், ரெண்டு, பொம்பளைங்க கிட்ட இருந்து ஒதுங்கியே இரு."
அவர் இவ்வாறு சொல்லி முடித்ததும் நோயாளியின் மனைவி எரிச்சலோடு மருத்துவரைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் புதைந்திருந்த ஆயிரம் அர்த்தங்களை ஒரு நொடியில் புரிந்து கொண்ட மருத்துவர்.
"உடம்பு ஆசையை கட்டுப்படுத்த முடியாட்டா பரவாய் இல்லை. குடிக்கிறதையாவது நிறுத்தினால் போதும்" என்றார்.
"அய்யய்யோ, குடியை விட பெண்ணாசைதான் மோசமானது. அதைத்தான் முதலில் கட்டுப்படுத்தணும்" என்று அலறியடித்துக் கொண்டு கூறினான்.
அப்போது அவன் மனைவி குறுக்கிட்டு,
"பேசாம மருத்துவர் சொல்லறதை கேருங்க. அவர் சொன்னபடி நடக்காட்டா உங்க உடம்பு எப்படி குணமாகும்?" என்று உத்தரவு போட்டாள்.
|