• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-31 15:02:50    
நிகழ்ச்சிகளை கேட்பதில் நேயர்களின் ஆர்வம்

cri

வாணி: நேயர்களே, நிகழ்ச்சிகளை கேட்பதில் நீங்கள் காட்டும் ஆர்வமும், நிகழ்ச்சிகள் உங்களுக்கு பயனுள்ளவையாக அமைகின்றன என்பதும் எமக்கு மகிழ்ச்சி. அடுத்து நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா நேயர் கே.கே.போஜன் எழுதிய கடிதம். 13.2.2006 அன்றைஇய சீன மகளிர் பற்றிய நிகழ்ச்சியில் சீனாவில் உயர்நிலையிலுள்ள இரண்டு பெண்கள் பற்றியும் அவர்களாற்றி வரும் தொண்டு பற்றியும் கூறினீர்கள். கிராமத்தில், வறுமையில் வாடி, மரம் நட்டு வேலை வாய்ப்பை பெருக்கி ஊர் மக்களுக்காக பாடுபட்டதை கேட்டபோது கேட்டபோது பாரதி கண்ட புதுமைப் பெண் என்றே இவர்களை கூறவேண்டும் எனத் தோன்றுகிறது. மேலும் சீனாவில் பெண்களுக்கு 55, ஆண்களுக்கு 60 வயது வரை அரசாங்கத்தில் பணிபுரியலாம் என்பதையும் கேட்டு என் கடைக்கு வருகின்ற வாடிக்கையாளருக்கு சொன்னேன். இந்தியாவில் குடிப்பழக்கத்துக்கு எதிராக விடாப்பிடி போராட்டம் நடத்திய தலித் வீரப் பெண் கிரிஜா தேவி என்பவருக்கு ஐ நா மாநாட்டில் பேச அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாரதி கண்ட கனவு நனவாகும் தருணம் வந்துள்ளது என்றே தோன்றுகிறது என்று எழுதியுள்ளார்.

க்ளீட்டஸ்: போஜன் எழுதும் கடிதங்கள் பொதுவாக நிகழ்ச்சி பற்றிய விமர்சனம் மட்டுமல்லாது தொடர்புடைய இந்திய தகவலோடு இணைந்தே அமைந்திருப்பதை கவனித்தேன். இது ஆக்கபூர்வமான அணுகுமுறை, என்பது என் எளிய கருத்து. அடுத்து, இலங்கை காத்தான்குடி நேயர் எம்.ஐ.ஜி.எம். முன்சீர் எழுதிய கடிதம். 23.03.2006 அன்று இயற்கையின் சீற்றத்தினால் பொருளாதார வளர்ச்சித்தடை என்ற செய்தி தொகுப்பு மிக நன்றாக இருந்தது. நீங்கள் அனுப்பிய ஒலிவளர்க்கும் உறவு பத்திரிக்கையை படித்தேன். இதில் என்னைக் கவர்ந்த அம்சம் நேயர் மன்றங்கள். சீன வானொலியின் நேயர் மன்றங்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பது என் நம்பிக்கை. இந்தியாவைப் போன்று இலங்கையிலும் சீன வானொலி நேயர் மன்றமொன்றை உங்கள் உதவியுடன் உருவாக்க முடியும் என்று எழுதியிருக்கிறார்.

வாணி: முன்சீர் அவர்களே. நேயர் மன்றம் அமைப்பதில் உங்களுக்குள்ள ஆர்வம் வரவேற்கத்தக்கது. நேயர் மன்றம் அமைப்பது என்பது நாங்கள் ஏற்பாடு செய்வதல்ல, நேயர்களாகிய நீங்கள் உங்கள் அருகாமையில் உள்ள சீன வானொலியைக் கேட்கும் நேயர்களைக் ஒருங்கிணைத்து மன்றமாக செயல்படுவதற்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். முதலில் நீங்கள் அருகில் உள்ள சீன வானொலி கேட்கும் நண்பர்களை ஒருங்கிணைத்து மன்றம் அமையுங்கள். மன்றத்தின் பெயர், உறூப்பினர்களின் தெளிவான முகவரியுடன் கூடிய விபரம், மன்றக் கூட்டத்தின் அறிக்கை ஆகியவற்றை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். நாங்கள் உங்கள் மன்றத்தை பதிவு செய்து உங்களுக்கு அறிவிப்போம். அதன் பிறகு உங்கள் குரல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நீங்களும் உங்கள் மன்றத்தினரும் பங்கேற்று சிறப்பிக்கலாம்.