
இன்று சர்வதேச குழந்தைகள் தினம். சீனாவில் குழந்தைகளின் வளர்ச்சி நிலைமை மேலும் மேம்பட்டுள்ளது. சீன அரசவை மகளிர் மற்றும் குழந்தைகள் பணிக்கமிட்டி அலுவலகத்திலிருந்து செய்தியாளர் இதை அறிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக, சீனாவில் குழந்தைகளின் உடல் நல மற்றும் ஊட்டச்சத்து நிலைமை மேம்பட்டு வருகின்றன. குழந்தைகளின் சட்டப்பூர்வ உரிமை மற்றும் நலன், சட்ட படி பாதுகாக்கப்பட்டுள்ளன. புள்ளிவிபரங்களின் படி, 2004ஆம் ஆண்டில், சிசுக்களின் மரண விகிதம் சுமார் 2 விழுக்காடாகும். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் விகிதம் தெள்ளத்தெளிவாக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், சீனாவில் துவக்க நிலை கல்வியின் பரவல் விகிதம் தொடர்ந்து உயர்ந்துள்ளது. 2004ஆம் ஆண்டு இறுதி வரை, துவக்க நிலை பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய வயதுடைய குழந்தைகளில் சுமார் 99 விழுக்காட்டினர் பள்ளிகளில் சேர்கின்றனர்.
|