• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-04 18:29:01    
சிரிப்பு ரயில் என்னும் உதவி பணித் திட்டம்

cri
சீனாவில் "சிரிப்பு ரயில்"எனும் திட்ட பணி மூலம் இது வரை 81 ஆயிரம் பேருக்கு உதட்டில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உதடுகளின் குறைபாடுகள் முழுவதுமாக நீக்கப்பட்டன.
இந்த பணித் திட்டத்தை துவக்கியவர் அமெரிக்க குடியுரிமை கொண்ட சீனர் திரு வுவான் ச்சியா லியன் ஆவார். 1999ம் ஆண்டில் அமெரிக்காவில் அவர் இந்த அறநிலை நிகழ்ச்சியை நிறுவியுள்ளார். வறிய ஊனமுற்றோர்கள் இலவச அறுவை சிகிச்சை பெறுவதன் மூலம் அவர்களின் தலைவிதியை மாற்றி சிரிப்புடன் வாழ்க்கையை எதிர்நோக்குவது இந்த அறநிலை நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
1999ம் மாண்டு முதல் சீன அறநிலை தலைமை சங்கம் "சிரிப்பு ரயில்"எனும் திட்ட பணியுடன் ஒத்துழைப்பு மேற்கொண்டது முதல் இதுவரை சீனாவின் 30 மாநிலங்கள் மாநகர்கள் மற்றும் தன்னாட்சி பிரதேசங்களிலுள்ள 100க்கும் அதிகமான மருத்துவ மனைகளில் இத்தகைய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் நாடு தழுவிய அறநிலை நிகழ்ச்சியாக இது வளர்ந்துள்ளது.