• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-06 16:45:42    
ஆண்களுக்கு என்ன உணவு நல்லது

cri
ஆண்கள் அடிக்கடி உட்கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் யாவை?

தக்காளி ஆண்களுக்கு வினர்ப் புற்று நோய் தடுப்புக்கும் மிக உதவியாகின்றது. ஏனென்றால் தக்காளிக்குளே சிவப்பு சத்து என அழைக்கப்படும் கெராட்டின் சத்து பெருமளவில் நிறைகின்றது. இந்த சத்து பச்சை தக்காளி சாறில் கிடைக்காது. தக்காளியை கொழுப்பு உள்ள பொருட்களுடன் சேர்த்து சமைத்தால் இந்த கெராட்டின் சத்து வெளிப்படும். உட்கொள்ளும் போது உடம்பினால் அது ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறிஞர்கள் ஆச்சரியத்துடன் கண்டறிந்துள்ளனர்.

முட்டைக் கோசுக்கு சிறுநீரகப் புற்று நோய் தடுப்பு திறன் உண்டு. 50 ஆயிரம் ஆண்கள் உட்கொள்ளும் அன்றாட உணவுபொ பொருட்களைப் பார்த்தால் வாரத்துக்கு 5 முறை முட்டைக்கோசு போன்ற இலைக் காய்களை சாப்பிட்டால் அவர்களில் சிறுநீரகப் புற்று நோய் ஏற்படும் விகிதம் இந்த காய் உட்கொள்ளாதவர்களின் சிறு நீரகப் புற்று நோய் தொற்றிய ஆண்களில் 50 விழுக்காடு மட்டுமே இருப்பதை அறிவியலாளர் கண்டுபிடித்துள்ளனர். ஆகவே ஆண்கள் அடிக்கடி முட்டைக் கோசு சாப்பிட்டால் உடல் நலனுக்கு துணைபுரியும்.

நிலக் கடலை சாஸ் ஆரோக்கியமான இதயத்துக்கு துணை புரியும். ஒவ்வொரு நாள் காலையில் ரொட்டி தின்னும் போது கடல் கலை சாற்றை ரொட்டியின் மேல் தடவி உட்கொண்டால் இதய நோய் அழற்சியை குறைப்பதற்கு நன்மை தரும்.

வாட்டர் மெலன் எனப்படும் தண்ணீர்ப் பழம் பற்றி குறிப்பிடுகையில் 55 வயதிற்கு மேலான ஆண்கள் ரத்த அழுத்த நோயிநால் அல்லல்படுவது அதிகம். வாட்டர் மெலன் பழத்தில் பொட்டாசியம் சத்து நிறைய உள்ளது. வாழை பழத்துக்கும் பொட்டாசியம் சத்து அதிகம். ஆனால் வாட்டர் மெலனில் உள்ள பொட்டாசிய அளவு வாழைப்பழத்தில் உள்ள அளவை விட அதிகம். ஆகவே மக்கள் குறிப்பாக ஆண்கள் பழங்களை சாப்பிடும் போது வாட்டர்மெலனை முதலில் தெரிவு செய்ய வேண்டும்.

நேயர்களே. இன்றைய நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும் தகவல்களை அறிமுகபடுத்தியுள்ளோம். இப்போது கேட்ட தகவலை வாழ்க்கையில் பயன்படுத்துங்கள். உடல் நலத்துடனும் உள்ள நலத்துடனும் நீடூழிவாழ உளமார வாழ்த்துகிறேன்.