சீனாவின் தொழில் மற்றும் வணிக வளர்ச்சியில், நீண்ட வரலாறுடைய புகழ்பெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தையை செழுமையாக்கி, சீனப்பண்பாட்டை வெளிக்கொணர்ந்து, சர்வதேச பரிமாற்றத்தை மேற்கொள்வதில் முக்கிய பங்காற்றியுள்ளன. இந்நிறுவனங்கள், சீன நுகர்வோரின் மனதில் உயர்வான வர்த்தக சின்ன மதிப்புடையவை. இன்றைய நிகழ்ச்சியில், இவை சீர்திருத்தத்துடன் வளர்ச்சியைக் காணும் நிலைமையைப் பார்ப்போம்.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளின் வளர்ச்சி மூலம், இந்த பழைய தொழில் நிறுவனங்கள், சீனாவிலும் உலகிலும் மிகவும் புகழ்பெற்றுள்ளன. சீன சமூக அறிவியலகத்தின் பொருளாதார ஆய்வகத்தின் ஆய்வாளர் யியாங் சுன் சியே கூறியதாவது:
இந்த புகழ்பெற்ற பழைய நிறுவனங்கள் ஒரு வகை மறைமுக சொத்து ஆகும். அதன் நேர்மையான நம்பிக்கையான சீன பாரம்பரிய வணிகப் பண்பாட்டு எழுச்சி, சீன வணிக பொருளாதாரம் முழுவதற்கும் பொது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த புகழ்பெற்ற பழைய நிறுவனங்களை வளர்ப்பது, நடைமுறை முக்கியத்துவம் கொண்டது என்றார் அவர்.
தற்போது, சீனாவில் பல்வேறு வகையான புகழ்பெற்ற பழைய தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, சுமார் 5000 ஆகும். போட்டி நாளுக்கு நாள் தீவிரமாகும் சந்தை பொருளாதார நிலைமையில், இந்தத் தொழில் நிறுவனங்களில் பெரும்பாலானவை, புத்தாக்கம் குறைவு வலுவற்ற, அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு, சந்தை திறப்பு பலவீனம் முதலிய இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றன.
சீனாவிலும் உலகிலும் மிகவும் புகழ்பெற்ற சியன் சியாங் யீ என்னும் பட்டு துணிக் கடை, 1830ம் ஆண்டில் பெய்ஜிங்கில் திறக்கப்பட்டது. வளர்ச்சியுற்ற காலத்தில், பெய்ஜிங், ஷாங்காய், தியன்ஜின், ஜப்பானின் ஒசாகா ஆகிய இடங்களில், சியன் சியாங் யீ 27 கிளைகள் திறக்கப்பட்டன. ஆனால், அரசுசார் மற்றும் தனியார் இணைந்த நிர்வாகத்திலிருந்து, திட்டப்பொருளாதாரத்தைக் கடந்து, தற்போதைய பங்கு அமைப்பு முறை தொழில் நிறுவனமாக இருப்பதில், சியன் சியாங் யீயின் நிலைமை நன்றாக இல்லை. அதன் துணை தலைவர் கேள சென் சாங் கூறியதாவது:
பழைய புகழ்பெற்ற தொழில் நிறுவனங்களின் வரலாற்று சுமை கடினமாக இருக்கிறது. அதன் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அமைப்பு முறை மாற்றிய பிறகு, பணியாளர்கள் பங்கு உரிமையாளராக மாறியதால், நிதி ஒப்பீடளவில் குறைவு என்றார் அவர்.
புதுப்பிப்பு பற்றாக்குறை இருப்பதால், பழைய சின்னத்தைப் பயன்படுத்தி, புதுமையான உள்ளார்ந்த ஆற்றலுடைய துறையை திறந்து வளர்க்க முடியாது என்பது, கடந்த சில ஆண்டுகளில் இந்த பழைய புகழ்பெற்ற தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியடையாததற்கு முக்கிய காரணமாகும் என்று யியாங் சுன் சியே கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
சந்தையின் போட்டிக்கு எப்படி பொருந்தும் என்பது, இந்நிறுவனங்கள் வளர்ச்சியடைவதற்கு முக்கிய காரணி. வேறுபட்ட தொழில் நிறுவனங்களின் நிர்வாகம் இன்னலில் சிக்கிக்கொள்ளும் காரணம் வேறுப்பட்டது. அதற்கு உகந்த நிலைமையின் படி சீர்திருத்தத் திட்டத்தை வகுக்க வேண்டும். சில அரசுசார் தொழில் நிறுவனங்கள் அமைப்பு முறையை வெற்றிகரமாக மாற்றிய அனுபவத்தைக் கற்றுக்கொண்டு பயன்படுத்த வேண்டும் என்றார் அவர்.
புகழ்பெற்ற பழைய தொழில் நிறுவனங்களுக்கு மாபெரும் உள்ளார்ந்த மதிப்பு உள்ளது. இதனால், சீன அரசும் அரசுசாரா அமைப்புகளும், இந்நிறுவனங்களின் பாதுகாப்பு மற்றும் மறுமலர்ச்சியில் கவனம் செலுத்தி வருகின்றன. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு உரிமை கோரும் விண்ணப்பம் வெற்றி பெற்றதால், மனித இயல்பு ஒலிம்பிக் என்ற கருத்து, மென்மேலும் அதிகமான மக்களால் புரிந்துக்கொள்ளப்பட்டது. பெய்ஜிங்கின் பழைய புகழ்பெற்ற தொழில் நிறுவனங்களை மறுமலர்ச்சி செய்வது, தொடர்புடைய வாரியங்களால் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டின் மே திங்களில், கிழக்கு சீனாவின் ஹாங்சேள நகரின் பழைய புகழ்பெற்ற தொழில் நிறுவனச்சங்கம், பழைய புகழ்பெற்ற தொழில் நிறுவனங்களைப் பாதுகாத்து வளர்க்கும் சட்டக்கருத்துருவை வெளியிட்டுள்ளது. இது, சீனாவில் முதல் முறையாகும்.
இவ்வாண்டு முதல், நாடெங்கும் பழைய புகழ்பெற்ற தொழில் நிறுவனங்களை வளர்க்கும் திட்டப்பணியை நிறைவேற்றுவதாக, அண்மையில், சீன வணிக அமைச்சகம் அறிவித்துள்ளது. பிரச்சாரம் உள்ளிட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி, இத்தகைய தொழில் நிறுவனங்கள், பாரம்பரிய தொழில் நுட்பத்தையும் பண்பாட்டையும் கையேற்று, நிர்வாக முறையைப் புதுப்பித்து, தமது வர்த்தக சின்னத்தின் மேம்பாட்டைப் பயன்படுத்தி புதிய வளர்ச்சியடையும்.
சீனாவின் புகழ்பெற்ற பழைய தொழில் நிறுவனங்கள் மீண்டும் வளர்ச்சியடைய வேண்டுமானால், பழைய முறையை சீர்திருத்த வேண்டும் என்று சீன துணை வணிக அமைச்சர் சாங் ஜீ காங் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:
தற்போதைய புகழ்பெற்ற பழைய தொழில் நிறுவனங்கள் அனைத்தும், நவீன தொழில் நிறுவனத்தின் அமைப்பு முறையை நிறுவுமாறு கோரியுள்ளோம். கருத்தின் மாற்றம், அமைப்பு முறையின் புதுப்பிப்பு முதலியவை மூலம், வளர்ச்சியடைய நடவடிக்கை மேற்கொள்வதோடு, அரசு, ஆதரவும் அளிக்க வேண்டும் என்றார் அவர்.
திட்டத்தின் படி, சீன வணிக அமைச்சகம், இந்த புகழ்பெற்ற பழைய தொழில் நிறுவனங்களின் விபரமான தகவல்களைத் திரட்டி, 3 ஆண்டுகளில் சீனாவின் 1000 புகழ்பெற்ற பழைய தொழில் நிறுவனங்களை மீண்டும் உறுதிப்படுத்தும். இன்றியமையாத உதவி மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை வகுத்து, இந்நிறுவனங்களின் வளர்ச்சியை விரைவுப்படுத்துவதுடன், இதில் உள்ளார்ந்த வளர்ச்சி ஆற்றலுடைய தொழில் நிறுவனங்களைக் கண்டறிந்து வளர்க்கும். அவற்றின் வர்த்தக சின்ன மேம்பாட்டைப் பயன்படுத்தி, தொழில் நிறுவனங்களின் கட்டமைப்பை மேம்படுத்தி, நவீன புழக்க முறையை வளர்த்து, அவற்றை, போட்டியாற்றல் வாய்ந்த புகழ்பெற்ற தற்சார்ப்பு வர்த்தக சின்னமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
தவிர, பரந்த செல்வாக்கு மற்றும் வலிமைமிக்க சந்தை மதிப்புடைய புகழ்பெற்ற பாரம்பரிய உற்பத்தி பொருட்களையும் தொழில் நுட்பத்தையும் மீட்டு, புதிய நிதியையும் இன்றியமையாத கொள்கை ஆதரவையும் வழங்கி, பயனுள்ள பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை நனவாக்க சீன வணிக அமைச்சகம் முயற்சி செய்யும்.
|