• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-05 17:55:21    
வேண்டாம் வெட்டி வேலை

cri
தாம் நடத்தி வந்த திருமண ஜோடி சேர்க்கும் முகமையைப் பெரிதாக்கி, துயரச் சுமைகளை இறக்கி வைக்க உதவும் இந்த பாரைத் தொடங்கினார். அழுவதற்காக யாராவது பணம் செலவழிப்பார்களா? என்ற கேள்வி எழுந்தது. இவருடைய மனைவி உட்பட பலர் "வேண்டாம் இந்த வெட்டி வேலை," என்று எடுத்துச் சொன்னார்கள். ஆனால் இவருக்கோ ஊக்கம் குறையவில்லை. மனம் தளரவில்லை. ஒரு தடவை தற்செயலாக உள்ளூர் தொலைக் காட்சியைத் திருப்பிய போது அதில் காதலில் தோல் வியுற்று தற்கொலைக்கு முயன்ற, கன்னி ஒருத்த கண்ணீர் விட்டுக் கதறி அழுத, காட்சியைக் கண்டார். லு வோ. உடனே தொலைக்காட்சி நிலையத்துடன் தொடர்பு கொண்டு, அந்த இளம் பெண்ணை தமது பாருக்கு வரவழைத்து மணிக்கணக்காகப் பேசினார். அழுது புலம்பிய அவள் கடைசியாக மனம் தேறி, இனிமேல் தற்கொலை பற்றி சிந்திப்பதில்லை என்று சத்தியம் செய்து கொடுத்தான். அவர்கள் இருவரும் நடத்திய உரையாடல் ஒளிப்பதிவு செய்யப்பட்டு, தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. இதன் மூலம் இவருடைய அழுகைபார் மிகவும் பிரபலமடைந்து நிறைய வாடிக்கையாளர்கள் தேடிவரத் தொடங்கினார்கள்.

இவருடைய வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் வெள்ளைச் சட்டைப் பிரமுகர்கள். அழுதால் அந்தஸ்து குறைந்து விடுமோ என்று அஞ்சி, மனதுக்குள்ளே சமைந்து கொண்டிருப்பவர்கள். ஒரு வங்கியின் துணை மேலாளராக இருந்த ஒரு பெண், தனது கணவனுக்கு நான் காண்டுகளாக ஒரு தொடுப்பு இருப்பது தெரிய வந்ததும் பதறிப்போனான். மன வேதனையை வெளிப்படுத்திக் கதறினாள். தனக்குக்கீழே பணியாற்றும் இதர ஊழியர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயம். மேலும் 7 வயது மகளுக்கும் தெரியாமல் மூடி மறைக்க வேண்டிய கட்டாயம். இந்தப் பெண் லுவோவின் அழுகைபார் பற்றி தொலைக்காட்சி மூலம் கேள்விப்பட்டு வந்தாள்.

சில வாடிக்கையாளர்கள் திரும்பத் திரும்ப வந்தனர். யாங் என்ற இளைஞன் மூன்று தடவை வந்தான். அவன் திரும்பத் திரும்ப வருவது வேதனை தருவதாக லுவோ கூறினார். வேதனையைக் கொட்டியழ வேறு வழியில்லாமல் தானே இங்கே வருகிறான் என்றெண்ணி ஆறுதல் கூறி அனுப்பினார். வேலைக்காக குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாக வாழும் குடிபெயர்ந்த தொழிலாளர்களும் இவருடைய வாடிக்கையாளர்கள். மாதம் 600 யுவான் மட்டுமே சம்பாதிக்கும் 19 லயது யாங் என்ற இளைஞன். குடும்பத்தை விட்டுப் பிரிந்து வந்த துக்கம் தாளாமல் திரும்பத்திரும்ப வந்து அழுது புலம்பிய போது, அவனிடம் லுவோ கட்டணம் வாங்கவில்லை. ஓராண்டில் இவருக்கு 10,000 யுவான் இழப்பு ஏற்பட்டது. ஆனாலும் ஏழைகளிடம் போய் என்ன பணம் வாங்குவது என்று விட்டுவிட்டார். நல்ல வேளையாக திருமண முகமை இவருக்கு பக்கபலமாக இருக்கிறது. இது வரை ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் லுவோ நடத்தும் அழுகை பாருக்கு நேரடியாக வந்து அழுது ஆறுதல் பெற்றிருக்கிறார்கள். முப்பதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கஷ்டங்களைக் கொட்டி அழுதிருக்கிறார்கள்.

மற்றவர்களின் மனக்கஷ்டத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது முறைதானா என்ற கண்டனங்கள் பரவலாக எழுந்த போதிலும், "இது ஒரு நல்ல வியாபாரத் தந்திரம்" என்று பாராட்டுகிறவர்களும் இருக்கிறார்கள். வேகவேகமாக நவீன மடைந்து வரும் சமுதாயத்தில் மன அழுத்தங்கள் அதிகரிக்கும் போது, இத்தகைய சுமைதாங்கிகள் தேவைதான் என்கிறார் பீகிங் பல்கலைக்கழக சமூகவியல் துறையின் ஆராய்ச்சியாளர் வு ஜெபின். ஆனால் அழுதால் மட்டும் கஷ்டம் தீர்ந்து விடுமா? வேண்டுமானால் தற்காலிகமாக ஒரு நிவாரணம் கிடைக்கலாம் என்று கூறும் வு "கஷ்டப்படுகிறவர்களிடம் அன்பு காட்டி உதவலாம். பணம் சம்பாதிக்கக் கூடாது" என்கிறார்.