• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-08 17:59:18    
சீனச் சிறுபான்மை தேசிய இனங்கள்

cri

இந்த நிகழ்ச்சியில் நமது அன்பு நேயர் கே. அருண் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கின்றோம். அறிவிப்பாளர் தமிழ்ச் செல்வம். கே. அருண் அவர்கள் சீனச் சிறுபான்மை தேசிய இனங்கள் பற்றி அறிய மிகவும் ஆவலாக விரும்புகின்றார். சிறுபான்மை தேசிய இனம் என்ன என்பதை விளக்கி கூறுமாறு அவர் கேட்டார். இந்த கேள்விக்குப் பதிலளிக்க, முதலில் சீனத் தேசிய இனங்கள் பற்றிய ஒட்டுமொத்தமாக கூற விரும்புகின்றேன். சீனாவில் மொத்தம் 56 தேசிய இனங்கள் சீனா, பல தேசிய இனங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த நாடாகும். உலகில் மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் ஒன்றாகும். 56 தேசிய இனங்கள் உள்ள சீனாவில், தற்போது மக்கள் தொகை 130 கோடி. சீனாவின் தேசிய இனங்களில், ஹன், மங்கோலிய, ஹூய், திபெத், உய்கூர், மியாவ், யீ, சுவாங், பூயி, கொரிய, மஞ்சு, தொங், யாவ், பை, து ச்சியா, ஹானி, ஹசாக், தை, லீ, லிசு, வா, ஷே, காவ்ஷான், லாஹூ,ஷூய், துங்சியாங், நாசி, ஜிங்போ, கேர்கெச்சி, து, தாவொர், முலாவ், ச்சியாங், புலாங், சாலா, மாவ்நான், கேலாவ், சிபோ, ஆக்ஷாங், புமி, தஜீக், நூ, உஸ்பெக், ரஷிய, எவெக், தேஆங், பாவ்ஆன், யூகு, ஜிங், தாதார், தூலோங், எலுன்க்ஷுன், ஹேச்சே, மன்பா, லோபா, ஜீநோ ஆகிய இனங்கள் இடம்பெறுகின்றன. தவிர, தற்போது சீனாவில், அவ்வளவாக அறியப்படாத சில இனங்களைச் சேர்ந்த மக்களும் உள்ளனர். சிறுபான்மை இனங்களின் மக்கள் தொகை சீன மக்களில் 92 விழுக்காடினர் ஹன் இன மக்கள். சிறுபான்மை தேசிய இன மக்கள் தொகை, மொத்த மக்கள் தொகையில் 8 விழுக்காட்டுக்கு மேல் இருக்கிறது. ஹன் இனம் தவிர 55 தேசிய இனங்கள் உள்ளன. ஹன் இனத்தை விட, அவற்றின் மக்கள் தொகை குறைவாக இருப்பதால், சிறுபான்மை தேசிய இனம் என அழைக்கப்படுகிறது. இந்த சிறுபான்மை தேசிய இன மக்கள், சீனாவின் வடமேற்கு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பிரதேசத்தில் பரவி வாழ்கின்றனர். பல்வேறு தேசிய இனங்களும் இணக்கமாக வாழ்கின்றன காலப் போக்கில், ஹன் இன மக்களை முக்கியமாகக் கொண்ட, பல தேசிய இன மக்கள் ஒரே இடத்தில் கலந்து வாழும் நிலைமையும் ஒரு சிறுபான்மை தேசிய இன மக்கள் ஒரே இடத்தில் குழுமி வாழும் நிலைமையும் உருவானது. 55 சிறுபான்மை தேசிய இன மக்களில், ஹூய் மற்றும் மஞ்சு இன மக்கள் சீன மொழியைப் பொதுவாக பயன்படுத்துகின்றனர். ஏனைய இனத்தவர்கள், சொந்த மொழி அல்லது சீன மொழியைப் பயன்படுத்துகின்றனர். பல ஆண்டுகளாக, 96 லட்சம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில், 56 தேசிய இனங்கள் கூடி வாழ்ந்து, குடும்பங்களை வளர்த்து, நீண்டகால வரலாற்றையும் ஒளிமயமான பண்பாட்டையும் உருவாக்கி வருகின்றன. சீனாவில் 55 தேசிய இனங்கள் வெவ்வேறான மதங்களைப் பின்பற்றுபவர்களா என்று கே. அருண் அவர்கள் கேட்டார். இது பற்றிய விளக்கம் பின்வருமாறு தருகின்றோம். சீனாவில் முக்கிய மதங்கள் பல மதங்கள் கொண்ட நாடாக சீனா திகழ்கிறது. புத்த மதம், தௌ மதம், இஸ்லாமிய மதம், கத்தோலிக்க மதம், கிறிஸ்துவ மதம் ஆகியவற்றின் மீது முக்கியமாக நம்பிக்கை கொள்ளப்படுகிறது.

 அண்மையில் செய்தியாளருக்கு பேட்டி அளித்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதத் துறை பிரமுகர்கள் பேசுகையில், சீனாவில் மத நம்பிக்கை சுந்திரத்தை போதியளவில் அனுபவிக்கலாம், மத நம்பிக்கை மற்றும் பழக்கவழக்கங்களுக்கு சீன அரசு ஆக்கப்பூர்வமாக பராமரிப்பையும் மதிப்பையும் தந்துள்ளது என்று கூறினார்கள். கிறிஸ்துவ மதம் கிறிஸ்துவ மதம், கி.பி. 19வது நூற்றாண்டில் மேலை நாடுகளிலிருந்து சீனாவில் பரவியது. இம்மதத்தின் பரவலுடன், bibleவும் சீனாவில் பெருவாரியாக வெளியிடப்பட்டது. 1990ஆம் ஆண்டு முதல், சீன கிறிஸ்தவர்களின் முயற்சியுடனும் அரசின் ஆதரவுடனும் bibleஇன் வெளியீடு மற்றும் விற்பனை, ஒரு விரிவான தொடரமைப்பாக உருவாகியுள்ளது. மேலும், மதத்தை பரப்பும் சுதந்திரத்தை சீன கிறிஸ்துவர்கள் போதியளவில் அனுபவிக்கின்றனர். மத வழிபாட்டு இடங்களில் அவர்கள் மத நடவடிக்கையில் ஈடுபடுவது மட்டுமல்ல, சுதந்திரமாக மற்றவருக்கு கிறிஸ்துவ மறையினை பிரசாரமும் செய்யலாம். கத்தோலிக்க மதம் மேலை நாடுகளிலிருந்து வந்த கத்தோலிக்க மதம், கிறிஸ்துவ மதத்தை விட 1000 ஆண்டுகளுக்கும் முன் சீனாவில் பரவியது. கடந்த சில ஆண்டுகளில், கத்தோலிக்க மதம் சீனாவில் விரைவாக வளர்ந்து வருகிறது. புள்ளிவிபரங்களின்படி, தற்போது சீனாவில் 50 லட்சத்துக்கு அதிகமான கத்தோலிக்க மதத்தவர்கள் உள்ளனர். இஸ்லாமிய மதம் இஸ்லாமிய மதம் சீனாவில் தேசிய இனத் தன்மை மிக்க மதமாகும். சீனாவின் உய்கூர் இனம், ஹுய் இனம், யுகு இனம் ஆகியவை உள்ளிட்ட பத்துக்கும் அதிகமான சிறுபான்மை தேசிய இனங்கள் இஸ்லாமிய மதத்தை நம்புகின்றன. முஸ்லிம்களின் மத நம்பிக்கை சுதந்திரமும், பழக்க வழக்கமும் எப்பொழுதும் அரசால் பாதுகாக்கப்பட்டு மதிக்கப்படுகின்றன. முஸ்லிம்கள் ஆண்டுதோறும் புனிதப் பயணம் செய்வதற்கு அரசின் பல்வேறு பிரிவுகள் பல்வகை சேவைகளை வழங்கியுள்ளன. புத்த மதம் சீனா ஒரு மாபெரும் புத்தமத நாடு.

 2000 ஆண்டுகளுக்கு முன், புத்த மதம் சீனாவில் பரவியது. தற்போது சீனப் பெருநிலப்பகுதியில் சுமார் பத்து கோடி புத்த மதத்தவர்கள் உள்ளனர். 20 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் புத்த மத நடவடிக்கையில் ஈடுபடும் மதத்தவர்கள் எங்கும் காணப்படுகின்றனர். எந்நேரத்திலும், மத நடவடிக்கைகள் சீராக நடைபெறுகின்றன. வாழும் புத்தரின் மறு பிறப்பு என்ற திபெத் புத்த மதத்தின் சிறப்பு முறையையும் சீன அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இவையனைத்தும் மிக பல திபெத் மதத்தவர்களின் ஆதரவைபெற்றுள்ளன. சீனாவில் மத நிறுவனங்கள் சீனாவில், சீன புத்த மத சங்கம், சீன தௌ மத சங்கம், சீன இஸ்லாமிய மத சங்கம், சீன கத்தோலிக்க மத நாட்டுபற்று சங்கம், சீன கத்தோலிக்க மத பிஷப் குழு, சீன கிறிஸ்தவ மத நாட்டுபற்று கமிட்டி, சீன கிறிஸ்தவ மத சங்கம் முதலியவை நாடெங்கும் பரவியுள்ளன. பல்வேறு மத நிறுவனங்கள் தங்களது விதிமுறைகளுக்கிணங்க தேர்தல் நடத்தி, தலைவர்களையும் தலைமை நிறுவனங்களையும் தேர்ந்தெடுக்கின்றன. அவை, மத விவகாரங்களில் சுதந்திரமாக செயல்பட்டு, தேவைக்கு ஏற்ப மதப் பள்ளிகளை நிறுவி, மத திருமறையை அச்சடித்து, மத பத்திரிகைகளை வெளியிட்டு, பொது நல சமூக சேவையில் ஈடுபடுகின்றன.