• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-15 16:58:49    
கிராமத்தில் சுற்றுலா

cri

புதிய கிராமம், புதிய சுற்றுலா, புதிய அனுபவம், புதிய நடை என்ற தலைப்பிலான சுற்றுலாவை இவ்வாண்டின் துவக்கத்தில், சீனாவின் சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

உண்மையிலேயே, கிராமத்தின் காற்று தூய்மையானது. வரலாற்றுச்சிதிலங்கள் அதிக அளவில் உள்ளன. கிராமங்களின் இயற்கை காட்சி எழில் மிக்கது. இதனால் சீனாவின் நகரவாசிகள் பலர் கிராமங்களில் பயணம் மேற்கொள்ள விரும்புகின்றனர்.

வெளிநாட்டுப் பயணிகளைப் பொறுத்தவரை, கிராமத்தில் சுற்றுலா மேற்கொள்வது ஒரு நல்ல தெரிவு என்று கூறலாம். கிராமம் பற்றி குறிப்பிடும் போது, கிராமப் பண்பாடு, கிராம வாழ்க்கை, வயல் வெளிக் காட்சி ஆகியவை பற்றி நீங்கள் எண்ணியிருக்கலாம்.

ஆனால், சீனாவின் கிராமத்தில் சுற்றுலா என்றால், கிராமத்தைச் சுற்றிப்பார்ப்பது மட்டமல்லாது என்று கருதப்படுகின்றது. ஐயாயிரம் ஆண்டு வரலாறுடைய நாகரீக நாடான சீனாவின் வரலாறு, வேளாண் நாகரீக வளர்ச்சி வரலாறும் ஆகும்.

சீனாவின் பாரம்பரியப் பண்பாடு, கிராமங்களில் ஆழ்ந்த அடிப்படையைக் கொண்டது. அண்மைக் காலத்திலும் தற்போதைய காலத்திலும் மேலை நாடுகளின் தொழிற்துறை நாகரீகம் சீனாவுக்குள் நுழைந்த பின்னர், நகரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, கிராமங்களில் நவீன நாகரிகத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறைவானது. இதனால், பாரம்பரிய பண்பாடு அதிக அளவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

பல கிராமங்களில் பொது மக்களின் பழக்க வழக்கங்கள், பாரம்பரிய இசை நாடகங்கள், நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியவை உள்ளிட்ட நாட்டுப்புறக் கலையும் தொன்மை வாய்ந்த கிராமங்கள், குடியிருப்புக்கள், கோயில்கள் ஆகியவையும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. மேற்கூறிய தனிச்சிறப்பு வாய்ந்த கிராமங்களில் சுற்றுலா மேற்கொள்வது, வெளிநாட்டுப் பயணிகளின் சிறந்த தெரிவு என்று கூறலாம்.

நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, சீனாவின் சிங்சியு என்னும் ஒரு வகை உள்ளூர் இசை நாடகமாகும். அது சுமார் 300 ஆண்டு வரலாறுடையது. புகழ்பெற்ற பெய்ச்சிங் இசை நாடகத்தை விட இது மேலும் நீண்ட வரலாறுடையது. இந்த இசை நாடகம் தற்போதைய சான்சி மாநிலத்தில் பிறந்து வளர்கின்றது.

தற்போதும் சான்சி மாநிலத்தின் கிராமங்களில் பரவிவருகின்றது. விழா நாட்களில் பொது மக்களின் பொழுதுபோக்கில் இன்றியமையாத நிகழ்ச்சியாக இது திகழ்கின்றது. இம்மாநிலத்தில் சின்சியு எனப்படும் இசை நாடகம் உள்ளது மட்டுமல்ல, பண்டைகாலப் பணக்காரர்கள் விட்டுச்சென்ற பெருமைக்குரிய குடும்ப முற்றங்களும் புகழ் பெற்றவை.

எடுத்துக்காட்டாக, பெருமைக்குரிய சியௌ குடும்ப முற்றம் இவற்றில் ஒன்றாகும். கடந்த நூற்றாண்டின் 90ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் சீனாவின் பிரபல திரைப்பட இயக்குநர் சான்யிமௌ, தொங்கவிடப்படும் அழகான செந் நிற விளக்கு என்னும் உலகப் புகழ்பெற்ற திரைப்படத்தை இவ்விடத்தில் தயாரித்ததால் சியௌ குடும்ப முற்றத்தை அறிந்துகொள்ளும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைத்தது.

இவ்வாண்டின் துவக்கத்தில் எமது செய்திமுகவர் சிறப்பாக அங்கு சென்று பேட்டி கண்டார். 500க்கும் அதிகமான சீன மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் அதே நாள் அங்கு பயணம் மேற்கொண்டனர். இந்தப் பழமை வாய்ந்த சியௌ குடும்ப முற்றத்தில் நிகழ்ந்த கடந்த காலக் கதையை அறிந்துகொண்டதோடு, அங்கு அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருந்த இசை நாடகத்தையும் கண்டுகளித்தனர்.

அங்குள்ள வழிகாட்டி மாசென், சான்சி மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்படும் கிராமத்தில் சுற்றுலா மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். அவர் செய்தியாளரிடம் பேசுகையில்,  சான்சி மாநிலத்தின் கிராமப் பண்பாட்டில் மக்களின் பழக்க வழக்கம், இசை நாடகம், நடனம் ஆகியவை இடம்பெறும் அதேவேளையில், தொன்மை வாய்ந்த கிராமம், பழமை வாய்ந்த மக்கள் குடியிருப்புக்கள், இயற்கை காட்சி ஆகியவையும் தனிச்சிறப்பு வாய்ந்தவை.

இவையனைத்தும், சான்சி மாநிலத்தின் கிராமத்தில் சுற்றுலாவுக்குச் சிறந்த மூலவளம் ஆகும். குறிப்பாகக் கடந்த சில ஆண்டுகளில், உயர் வேக நெடுஞ்சாலை, கிராம நெடுஞ்சாலை ஆகியவை விரைவாக வளர்ச்சியடைந்திருப்பது, கிராமத்தில் சுற்றுலாவுக்கு வசதி தருகின்றது என்றார். சீனாவில் சான்சி மாநிலம் போல, கிராமத்தில் சுற்றுலாவுக்கான மூல வளம் கொண்ட இடங்கள் பல உள்ளன.

தென் சீனாவின் யாங்சி ஆற்றுப் பள்ளத்தாக்கு பிரதேசத்தில், கடந்த சில ஆண்டுகளில் மாபெரும் நீர் சேமிப்புத் திட்டப்பணியான யாங்சி ஆற்று மூ மலை இடுக்குத் திட்டப்பணியின் கட்டுமாணத்தினால், யிசாங் பிரதேசம் சுற்றுலா இடமாக மாறியுள்ளது.

மூ மலை இடுக்கு சுற்றுலா என்ற பயண நெறியினால், கிராம மக்களின் பழக்க வழக்கங்கள், வயல் வெளிக் காட்சி ஆகியவை உள்ளடங்கிய புதிய சுற்றுலா வகையும் இப்பிரதேசத்தில் தோன்றியுள்ளது. கடந்த ஆண்டில் 10 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் அங்கு பயணம் செய்தனர்.