• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-22 16:43:52    
கிராமப் பயணத்தில் மகிழ்ச்சி

cri

கிராமத்தில் சுற்றுலா என்ற தலைப்பிலான பயணத்தில், சிறுபான்மை தேசிய இனப் பழக்க வழக்கங்களும் கிராமப்புற இயற்கை காட்சியும் பயணிகளை ஈர்க்கும் முக்கிய அம்சங்களாகும்.

தென் மேற்கு சீனாவில் அமைந்துள்ள திபெத் பிரதேசம், குவெய்சோ மாநிலம், யுன்னான் மாநிலம் ஆகியவை அவற்றின் தேசிய இனப் பழக்க வழக்கங்கள் மற்றும் எழில் மிக்க இயற்கை காட்சிகளால், நீண்டகாலமாக அதிகமான பயணிகள் சுற்றுலா மேற்கொள்ள விரும்பும் இடங்களாகத் திகழ்ந்துவருகின்றன.

கிராமம், அதன் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். கடந்த சில ஆண்டுகளில், புல்வெளி, பாலை வனக் காட்சி ஆகியவை தலைப்பிலான சுற்றுலாவும் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. கிராமச் சுற்றுலாவின் எதிர்கால வாய்ப்பு பற்றி, சீன காங்ஹுவெய் செய்தி நிறுவனத்தின் அதிகாரி சாவ்ச்சிங்லுங் கூறியதாவது,

கிராமச் சுற்றுலா என்பதில் சமூகப் பண்பாடு, வரலாறு, இயற்கை காட்சி ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு இடத்தின் நிலைமை, பல முறை பயணிகளின் நினைவுக்கு வரக் கூடியது. 2006ஆம் ஆண்டு, எங்கள் சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்யும் கிராமச் சுற்றுலா நெறி, பழமை வாய்ந்த கிராமம், சிறுபான்மை தேசிய இனப் பழக்க வழக்கம் ஆகியவற்றை அறிந்துகொள்வதற்குத் துணை புரியும் சுற்றுலா நெறி.

மேற்கு சீனாவின் யுன்னான் மற்றும் குவெய்சொ மாநிலத்தில் சுற்றுலா தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெறுகின்றது. சிங்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம், உள் மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம், திபெத் தன்னாட்சிப் பிரதேசம் ஆகிய இடங்களுக்கு மேலும் அதிகமான பயணிகள் வருகை தருவார்கள் என்றார்.

கிராமத்தில் சுற்றுலா என்ற தலைப்பிலான பயணம், மக்கள் புதுமைகளை உணர்வது தவிர, ஒரு முக்கிய பொழுதுபோக்கும் ஆகும். நகரப்புறத்திலுள்ள கிராமங்களில் சில நாட்கள் ஓய்வு எடுக்கலாம். பிரபல காட்சித் தலங்களைப் பார்வையிட வேண்டும் என்பதல்ல. கிராமத்துக்குச் சென்று தூய்மையான காற்றை சுவாசிக்கலாம்.

விவசாயி குடும்பத்தின் உணவை உட்கொள்ளலாம். காய்கறிகளையும் பழங்களையும் பறிக்கலாம். சீனாவின் பல நகரவாசிகள், வார முடிவில் சுற்றுலா மேற்கொள்வதில் ஒரு வகை தெரிவு இது. நீண்ட காலமாக சீனாவில் பணி செய்யும் வெளிநாட்டுப் பயணிகள் சிலர் இவ்வாறு செய்கின்றனர். வார முடிவில் நகரப்புறங்களில் சுற்றுலா மேற்கொள்வது விவசாயக் குடும்பங்களில் பொழுதுபோக்கு என்று சீனாவில் கூறப்படுகின்றது.

 

பெய்ச்சிங் மாநகரில் ஆண்டுதோறும் மே திங்கள் முதல் அக்டோபர் திங்கள் வரை, வானிலை சிறப்பாக இருக்கும் வார முடிவில், கார் மூலம் நகரப்புறங்களுக்கோ பெய்ச்சிங் மாநகரின் அருகிலுள்ள ஹொய்பெய் மாநிலத்திற்கோ பயணிகள் அதிகமாக செல்கின்றனர். தனியார் கார்கள் அடிக்கடி நெடுஞ்சாலைகளில் வரிசையில் நிற்பது வழக்கம்.

பெய்ச்சிங்கில் ஆண்டுதோறும் விவசாய குடும்பங்களில் பொழுதுபோக்கு என்ற தலைப்பிலான சுற்றுலாவில் பங்குகொள்வோரின் எண்ணிக்கை பத்து லட்சத்தைத் தாண்டியுள்ளது என்று சில சுற்றுலாத்துறை அமைப்புகள் மதிப்பிடுகின்றன. இது பற்றி ஹொய்பெய் மாநிலத்தின் சுற்றுலா பிரிவின் அதிகாரி செய்லிமின் கூறியதாவது,

ஹொய்பெய் மாநிலத்தில், வசந்த காலத்தில் மலரைக் கண்டுகளிப்பது, கோடை காலத்தில் பயிரிடுவது, இலையுதிர் காலத்தில் பழங்களைப் பறிப்பது ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்ட பயணம் மக்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்றது.

விவசாயிகளின் வீட்டில் தங்கியிருப்பது, அவர்களது உணவை உண்பது, வேளாண்மையில் ஈடுபடுவது ஆகியவற்றை அம்சங்களாகக் கொண்ட விவசாயிகளின் வாழ்க்கையை உணரும் சுற்றுலா, புதிய நாகரிகமாக மாறிவருகின்றது என்றார்.

வெளிநாட்டுப் பயணிகளைப் பொறுத்தவரை, கலந்துகொள்ளத் தக்க கிராமச் சுற்றுலா நெறி என்பது, விவசாயிகளின் பழக்க வழக்கங்களை உணரும் சுற்றுலா நெறியையும் சிறுபான்மை தேசிய இனப் பிரதேசத்திலான சுற்றுலா நெறியையும் குறிக்கின்றது. இதன் மூலம், சீன மக்களின் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும் பயணிகள் ஆழமாக அறிந்துகொள்ள முடியும்.

தவிர, கம்பீரமான எழில் மிக்க இயற்கை காட்சிகளையும் கண்டுகளிக்கலாம். கிராமத்தில் சுற்றுலா என்ற தலைப்பிலான சுற்றுலாவுக்கு, கிராமங்களில் பயணம் மேற்கொள்ளுவது என்பது பொருள். இதனால், நகரங்களுடன் ஒப்பிடும் போது, வாழ்க்கை, வசிப்பிடம், போக்குவரத்து ஆகியவை தொடர்பான வசதிகள் குறைவு. பயணிகள் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது முக்கியம்.