
சீன நாட்டின் புலப்படாத பண்பாட்டு மரபுச்செல்வம் அடிப்படையில் கிராமங்களில் உள்ளது. கிராமப்புற பண்பாட்டு மரபுச்செல்வத்தை பாதுகாப்பது, உடனடிக்கடமை என்று கடந்த சில ஆண்டுகளாக நாட்டுப்புற பண்பாட்டைப் பாதுகாப்பதில் ஈடுபட்டு வரும் சீனாவின் புகழ் பெற்ற எழுத்தாளர் Feng Ji Cai கூறியுள்ளார். சீனாவின் பரந்து விரிந்த கிராமப்புறங்களில் இது வரையிலும் தனித்தனிமை வாய்ந்த பல்வேறு பண்பாட்டு மரபுச்செல்வங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளில், அளவுக்கு மீறிய அகழ்வு, வாரிசு பற்றாக்குறைவு முதலிய காரணங்களினால், மதிப்பு மிக்க கிராமப்புறப் பண்பாட்டு வளங்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன என்றார், அவர். கிராமப்புற பண்பாட்டு மரபுச்செல்வங்களை அழியாமல் காத்திட, முதலில், அவற்றின் நடப்பு நிலையை ஆராய்ந்து, நடைமுறைக்கு ஏற்ற பாதுகாப்புத்திட்டத்தை வகுக்க வேண்டும். அடுத்து, "புலப்படாத பண்பாட்டு மரபுச்செல்வ பாதுகாப்புக்கான சீனச்சட்டம்" வெகு விரைவில் வகுக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
|