• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-08 17:09:10    
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள்

cri

சீனாவின் சான்சேள நகரில்

உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகள் ஜெர்மனியில் நாளை துவங்குகின்றன. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கால்பந்தாட்ட ரசிகர்கள் ஒரு மாத காலம், தலை சிறந்த கால்பந்தாட்ட வீரர்களின், அணிகளின் திறமையைக் கண்டு களிக்க உள்ளனர். ஒரு மாத காலம் நீடிக்கும் இந்த கால்பந்தாட்ட திருவிழா உலகில் பல கோடி மக்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட விளையாட்டாகும்.

ஏற்கனவே இந்த உலகக் கோப்பைக்கான முன் தயாரிப்பாக காட்சிக்காக எக்ஸிபிஷன் பந்தயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் இப்போட்டிகளை கண்டுகளிக்க நுழைவுச்சீட்டுகளை முன்கூட்டியே வாங்க ரசிகர்கள் முண்டியடிக்கத் துவங்கியுள்ளனர். ஆனால் விளையாட்டு அரங்கத்தில் நுழைவுச் சீட்டு வாங்க நிற்பது பயனில்லை, இணையத்தின் மூலமே நுழைவுச் சீட்டுகளை முன்பதிவு செய்யமுடியும் என்று போட்டியின் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

பிராஞ்சில்

கடந்த சில நாட்களாக ரசிகர்கள் இந்தப் போட்டிகள் நடைபெறும் 12 விளையாட்டரங்கங்களில் நுழைவுச் சீட்டுகளை வாங்க குழுமி நின்று பயனில்லாமல் வீடு திரும்பியுள்ளனர். இணையத்தின் மூலம் இந்த போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டுகளை வாங்குவது நல்லது, முன்பதிவு செய்யப்பட்ட எஞ்சிய நுழைவுச் சீட்டுகள் மட்டும், பந்தயம் நடைபெறும் நாளில் அரங்கத்தில் விற்கப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். தற்போதைய நிலையில் 64 பந்தயங்களைக் கொண்ட இந்த உலகக்கோப்பையின் எட்டு விழுக்காட்டு நுழைவுச் சீட்டுகள் மட்டுமே விற்பனைக்கு எஞ்சியுள்ளதாகவும் அறியப்படுகிறது. உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளுக்கு விருப்ப விடுப்பு அளிக்கலாம் என்று மலேஷிய அமைச்சர் ஒருவர் முன்மொழிந்ததை சில வாரங்களுக்கு முன்பு விளையாட்டுச் செய்திகளில் வாசிக்க கேட்டோம்.

பிரேசிலில்

தற்போது பங்களாதேஷில் உலகக் கோப்பைக்கென தேர்வுகளை பின்போட்டுள்ளது அல்லது ஒத்திவைத்துள்ளது ஒரு பல்கலைக்கழகம். உலகக்கோப்பை இறுதி ஆட்டம் வரும் ஜூலை 9ம் நாள் முடியும் வரை பங்களாதேஷின் பொறியியல் மற்றும் தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் நடைபெறாது. முன்னதாக ஜூன் 3ம் நாள் முதல் 29ம் நாள் வரை நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த பல்கலைக்கழகத் தேர்வுகளை மாணவர்கள் ஒத்திவைக்குமாறு கோரியபோது, அவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. ஆனால் 100க்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அலுவலகத்தின் முன்பு நின்று விடாப்பிடியாக போராடியபின் வேறு வழியில்லாமல் பல்கலைக்கழக நிர்வாகம் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது. ஜூலை 14ம் நாள் வரை பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் கிடையாது