அன்னிய வணிகர்கள் முதலீடு செய்யும் தொழில் கட்டமைப்பு
cri
சீனாவில் அன்னிய வணிகர்கள் முதலீடு செய்யும் தொழில் கட்டமைப்பு மேம்பட்டுள்ளது என்றும், சேவை வர்த்தகம், அன்னிய வணிகர்களை புதிதாக ஈர்க்கிறது என்றும் சீனத் துணை வணிக அமைச்சர் Ma Xiu Hong அம்மையார் கூறியுள்ளார். இன்று பெய்ஜிங்கில் பேசிய அவர், கடந்த சில ஆண்டுகளாக, மேம்பட்ட தயாரிப்புத் தொழிலை வளர்க்க சீனா பாடுபடும் வேளையில், சேவை வர்த்தகத்துறைக்கு அன்னிய முதலீட்டைக் கொண்டு வருவதை ஆக்கப்பூர்வமாக தூண்டியுள்ளது என்றார். கடந்த ஆண்டு, வங்கி, காப்பீடு உள்ளிட்ட சேவை வர்த்தகத்துறையில் அன்னிய வணிகர்களின் நேரடி முதலீடு 1180 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது என்றும், சேவை வர்த்தகம், அன்னிய வணிகர்களின் நேரடி முதலீட்டை ஈர்க்கும் முக்கிய துறையாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார்.
|
|