
குவாங்சோ மாநகரின் உணவுப் பண்பாட்டுத் தனிச்சிறப்பியல்பு மிக்கது. குவாங்சோவில் உண்பது என்பது, சீனாவில் அனைவருக்கும் தெரியும். குவாங்சோ மாநகரம், மன நிறைவு தரும் உணவு வகை நிறைந்து காணப்படும் பெரிய நகரமாகும்.
அது, குவாங்துங் காய்கறி மற்றும் இறைச்சி வகையின் பிறப்பிடமாகும். ஏராளமான உணவகங்கள், பல்வகை நவீன மற்றும் பாரம்பரிய உணவுகள் ஆகியவற்றின் காரணமாக, ஈர்ப்புத் தன்மை மிக்க நகரமாக அது திகழ்கின்றது.

குவாங்சோ மாநகரின் உணவு வகைகளில், குவாங்துங் கறி வகை முக்கிய இடம் வகிக்கின்றது. நிறம், மணம், சுவை, வடிவம் என்பன, குவாங்சோ உணவின் தனிச்சிறப்பாகும்.
தவிர, குவாங்சோ உணவு வகைகளில், ஜப்பான், தென் கொரியா, வியட்நாம், தாய்லாந்து, பிரான்சு உள்ளிட்ட வெளிநாடுகளின் உணவு வகைகளும் சேர்ந்துள்ளன.

ஜப்பான், தென் கொரியா, வியட்நாம், தாய்லாந்து, இந்தியா, இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளின் உணவு வகைகளும் இடம்பெற்றுள்ளன.
உயிருடன் கூடிய மீன், இறால், நண்டு, இனிப்பு வகை, சிற்றுண்டி முதலியவை பயணிகளால் பெரிதும் வரவேற்கப்படுகின்றன.
|