
பண்பாட்டுப் பாரம்பரியமுடைய குவாங்சோவில், பெய்யுன் மலை, சூச்சியாங் ஆற்றின் இரவு காட்சி, யெசியூ மலை முதலியவை, பார்வையிடத் தக்கவை. இவை, குவாங்சோ மாநகரின் எழில் மிக்க காட்சியைப் பிரதிபலித்துள்ளன. குவாங்சோ மாநகரின் துங்சாங் சதுக்கத்தில், மாபெரும் செயற்கை நீர் வீழ்ச்சி உள்ளது.
தியெஹ நீர் வீழ்ச்சி என்று அழைக்கப்படுகின்றது. அதன் பின்புறம், 89 மீட்டர் உயரமுடைய கண்ணாடிச் சுவர் ஆகும். ஆசியாவில் மிகப் பெரிய செயற்கை நீர்வீழ்ச்சியாக இது திகழ்கின்றது.

சுன்ஹுவா வென்னீர் ஊற்று, விண்வெளிப் பயணக் காட்சி உலகக் காட்சி, துங்பாங் பொழுதுபோக்கு இடம், குவாங்சோ கடல் வாழ்வன அகம், சாங்லுங் இரவு விலங்கு உலகம், வுலுன்சான் விடுமுறை மண்டலம், சியான்சியாங் வன விலங்கு உலகம் முதலியவை தனிச்சிறப்பியல்பு மிக்கவை.

ஒரு நாள் பயணம், தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சுற்றுலா முதலியவை உள் நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் சிறந்த தெரிவாகத் திகழ்கின்றன. சுற்றுலா வகைகள், பின்வருமாறு,
குவாங்சோவில் ஒரு நாள் சுற்றுலா, முத்து ஆற்றங் கரையிலான பண்பாட்டு வரலாற்றுச் சின்ன சுற்றுலா, அண்மைக்கால புரட்சி வரலாற்றுச் சின்ன சுற்றுலா, பண்டைக் கால வணிக நகரச் சுற்றுலா, வின்நான் பூங்கா பண்பாட்டுச் சுற்றுலா, குவாங்சோ மௌவென் மலை உயிரின வாழ்க்கை சுற்றுலா, முத்து ஆற்று இரவு சுற்றுலா என்பனவாகும்.
|