காரெட் பச்சையாக சாப்பிடுவதற்கும் வேகவைத்து சாப்பிடுவதற்குமிடையில் எதில் சத்து அதிகம்?இது பற்றி கூறுகின்றோம்.
பொதுவாக மக்கள் பச்சையாக கேரட்டை தின்னுவது வழக்கம். இதை மருத்துவவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் சத்து குறைவு. ஏனென்றால் கேரட்டிலுள்ள சத்து வேகவைக்கப்பட்ட பின்தான் வெளியே வரும். ஆகவே கேரட்டை துண்டு துண்டாக நறுக்கி உணவு எண்ணெய் சேர்த்து வதக்கிய பின் கோழி இறைச்சி போன்ற கறிகளை சேர்த்து நன்றாக வேகவைத்தால் கேரட்டில் உள்ள சத்து 97 விழுக்காடு நமது உடம்பில் கலக்கும். கேரட் மீது காற்று படாமல் தடுக்க வேண்டும். துண்டு துண்டாக நறுக்கிய உடனே வேகவைத்து விட வேண்டும். அப்படி சமைப்பதன் மூலம் சத்து பாதுகாக்கப்படும். இதை நீங்கள் செய்து பாருங்கள்.
|