• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-12 18:58:39    
பண்டைகால சீனாவில் காணப்பட்ட ஆள் அடையாள சீட்டுகள்

cri

சீனாவில் சுய் வம்சகாலத்திலேயே (கி.பி.589-618) அடையாள சீட்டுகள் நடைமுறைக்கு வந்தன. ஆனால், உண்மையில் தாங் வம்சக்காலத்தில்(கி.பி.626-649)பேரரசர் லீ சி மின் அதிகாரிகளுக்கு மீன் அடையாள சீட்டுகளை விநியோகிக்க துவங்கினார்.

மரப்பலகை அல்லது உலோகத்தால் அவை தயாரிக்கப்பட்டவை. மீன் வடிவத்தில் இடது வலது எனும் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டன. இதில், அதிகாரிகளின் பெயர், அலுவலகம், பதவி, ஊதியம் முதலியவை பொறிக்கப்பட்டன. இது உண்மையான அடையாள சீட்டு என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். தவிரவும், உயர் அதிகாரிகளுக்கென மீன் அடையாள சீட்டுகளை வைக்கும் பைகளையும் பேரரசர் லீ வழங்கினார்.

ரரணி ஊ சே தியன் காலத்தில்(கி.பி.690), மீன் வடிவ அடையாள சீட்டு ஆமை வடிவ சீட்டாக மாற்றப்பட்டது. ஆனால், அதன் பயன் மாறவில்லை. சொங் வம்சக்காலத்தில்(கி.பி.960)அடையாள சீட்டுகள் நீக்கப்பட்ட போதிலும், மீன் பைகள் பயன்பாட்டுக்கு வந்தன. அது, தாங் வம்சக்காலத்தில் இருந்ததை விட எளிமையானது.

மிங் வம்சக்காலத்தில்(கி.பி.1368-1644)தந்தம், விலங்குகளின் எலும்புகள், மரத்துண்டுகள், உலோகங்கள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட அடையாள சீட்டுகளில் பெயர், ஊர், பதவிக்காலம், அதிகாரியின் தரம், ஆண்டு வருமானம் ஆகியவை அவற்றில் பொறிக்கப்பட்டன. இவை தற்கால அடையாள சீட்டுகளை மிகவும் நெருங்கியுள்ளன.