• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-29 16:59:57    
லுசான் மலையில்  இயற்கைக் காட்சி

cri

ஒவ்வொரு ஆண்டின் மார்ச் முதல் மே திங்கள் வரை சீனாவின் வசந்த காலம். தற்போது சீனாவின் லுசான் மலையில் எங்கெங்கும் பீச் மலர்களும் azaiea மலர்களும் மலர்கின்றன. இம்மலைக்குப் பயணிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

யாங்சி ஆற்றின் நடுப்பகுதியிலும் சியாங்சி மாநிலத்தின் சியூச்சியாங் புறநகரிலும் சீனாவின் முதலாவது நன்னீர் ஏரியான பொயாங் ஏரியின் கரையிலும் லுசான் மலை அமைந்துள்ளது.

இவ்விடத்தில் ஆண்டு முழுவதும் மழை அதிகம். மித வெப்ப காலநிலை அருமை. வசந்த காலத்தில் மலையில் வெப்ப நிலை வித்தியாசமானதாக இருப்பதால் மேகமும் மூடுபனியும் அதிகமாக உள்ளன.

வசந்த காலத்தில் லுசான் மலையில் எங்கும் முகில் கடல் காணப்படலாம். மலை உச்சியிலுள்ள ஹுவாசிங் , புசௌயெ ஆகிய இடங்கள், முகில் கடலைக் கண்டுகளிக்கும் நல்ல இடமாகும். காலையில் எழுந்திருந்த பிறகு, மேகமும் மூடுபனியும் மெல்ல மெல்ல மேலே நோக்கிச் செல்வதால், லுசான் மலை முழுவதும் முகில் கடலில் காணாமல் போய்விடும்.

மலையின் அடிவாரத்திலிருந்து மேலே நோக்கிப் பார்த்தால் மலையின் உச்சி, முகிலில் அவ்வப்போது தென்படும். மலை உச்சியிலிருந்து கீழை நோக்கிப் பார்க்கும் போது, எங்கெங்கும் முகில் கடல் தென்படுகின்றது. ஒரே அழகான காட்சி. லுசான் மலையில் வளர்ந்துவந்த லீவன்லியாங் என்பவர் கூறியதாவது,

மார்ச் அல்லது ஏப்ரல் திங்களில் லுசான் மலையில் பயணம் மேற்கொண்டால், மலையில் கட்டப்பட்ட ஹோட்டலில் தங்கியிருப்பது நல்லது.

காலையில் எழுந்திருந்து வெளியே செல்லும் போது, மலையில் எங்கெங்கும் மேகமும் மூடுபனியும் காணப்படுகின்றன.

சில சமயத்தில் தாம் எங்கே இருப்பது என்று தெரியவில்லை. உடல் மிதப்பது போன்ற உணர்வு ஏற்படும். இந்த உணர்வு பரவாயில்லை என்றார்.

லுசான் மலையில் மேகமும் மூடுபனியும் அதிக அளவில் இருப்பதன் காரணமாக, இம்மலையில் விளையும் தேயிலை தரமிக்கது. அவை, சீனாவில் மட்டுமல்ல, ஜப்பான், ஜெர்மனி, தென் கொரியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் விற்பனையாகின்றன.

ஆண்டுதோறும் ஏப்ரல் திங்களில் இத்தகைய தேயிலைகளைப் பிடுங்கித் தயாரிக்கும் சிறந்த காலமாகும்.

எனவே, லுசானில் சுற்றுலா மேற்கொள்வோரில் பெரும்பாலோர், தேயிலை வாங்கி, தங்களது உற்றார் உறவினர்களுக்கு அன்பளிப்பாக வழங்குவது வழக்கம்.

லுசான் மலைக்குரிய தனிச்சிறப்பு வாய்ந்த காலநிலையினால், இம்மலையில் தாவரங்கள் நன்கு வளர்ந்துவருகின்றன. தற்போது, மலர்ந்துகொண்டிருக்கும் பீச் மலர்கள், azaiea மலர்கள் மற்றும் பேரிக்காய்களின் நறுமணமும் லேசான காற்றும் வீசும் காலம்.

லுசான் மலையில் பயணம் மேற்கொள்ளும் சிறந்த காலமாகும்.

1934ஆம் ஆண்டில் கட்டப்பட்ட லுசான் மலைத் தாவரப் பூங்கா, சீனாவில் மிகவும் முன்னதாகக் கட்டப்பட்ட தாவரப்பூங்கா. இதைப் பார்வையிடத் தக்கது.

இப்பூங்காவில், மரப்பகுதி, வெப்பக்கூடப் பகுதி, சதுப்பு நிலத்தில் வளரும் தாவர வகைப் பகுதி, தேயிலைத் தொட்டம், சீனச் சுதேச மருந்துத் தோட்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. கண்களுக்கு விருந்து அளிக்கும் ஏராளமான தாவரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

புள்ளிவிவரங்களின் படி, இந்தத் தாவரப் பூங்காவில், உள் நாட்டு மற்றும் வெளிநாடுகளின் 3400க்கும் அதிகமான வகை தாவரங்கள் வளர்கின்றன. அத்துடன், 60க்கும் மேற்பட்ட நாடுகளுடன் விதைப் பரிமாற்ற உறவு நிறுவப்பட்டுள்ளது.

வசந்த வசந்த காலத்தில் லுசான் தாவரப் பூங்கா, தேவதாரு மர வகை மற்றும் azaiea மலர் வகையின் உலகம் என்று இப்பூங்காவில் பணி புரியும் துணை ஆய்வாளர் சியு சியாங்மெய் கூறினார்.