• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-13 23:01:04    
தவறான விளம்பரம் ஏற்படுத்திய இழப்பு

cri
தவறான விளம்பரம் ஏற்படுத்திய இழப்பு

லண்டனில் உள்ள பணக்காரர்கள் மட்டுமே தங்கக்கூடிய ஓட்டல் லேன்ஸ்பரோ. இந்த ஓட்டல் இணைய தளத்தில் அறை வாடகை ஒரு இரவுக்கு மூன்னூற்று ஐம்பது பவுண்ட் ஸ்டெர்லிங்(இங்கிலாந்து நாட்டுப்பணம்)என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக முப்பதைந்து பவுண்ட் ஸ்டெர்லிங் என்று விளம்பரப்படுத்தி இருந்தனர்.

இதைப் பார்த்ததும் ஒருவர் முப்பது இரவுக்கு அறையை 'புக்'செய்தார். மற்றும் என்பதாறு பேர் அறைகளை ரிசர்வ் செய்தனர்.

அதன் பிறகே ஓட்டல் நிர்வாகம் நடந்த தவறை உணர்ந்து கொண்டது. அறையை ரிசர்வ் செய்தவர்களிடம் நடந்த தவறை கூறி உண்மையான கட்டணம் எவ்வளவு என்பதை எடுத்துக்கூறினர். ஆனால் அதற்கு அறைகளை ரிசர்வ் செய்தவர்கள் சம்மதிக்கவில்லை.

கடைசியில் அவர்களிடம் சமரசம் பேசி மூன்று இரவுகளுக்கு மட்டும் குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கு சம்மதிக்கச் செய்தனர்.

அழகாக இருக்க சாக்லெட் குளியில்

அழகாகத் தோன்றுவதற்கு இப்போது புதிய முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதுதான் சாக்லெட் குளியல். சாக்லெட்டில் உள்ள கோகோவில் வயது முதிர்ச்சி அடைவதைத் தடுக்கும் சத்துப்பொருள் உள்ளது. இதனால் சாக்லெட் திரவத்தை உடம்பு முழுவதும் பூசிக்கொண்டு மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.

இத்தகைய சாக்லெட் சிகச்சை பிரான்சு நாட்டில் பாரீஸ் நகரில் உள்ள போர் சீசன்ஸ் ஓட்டலில் கொடுக்கப்படுகிறது.

இரண்டு அரை மணி நேரம் நடக்கும் இந்தச் சகிச்சைக்கு பதினான்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் ஆகும்.

முதுமை ஓய்வூதியம்

ஜெர்மனியில் அறுப்பதேழு வயதான முதியோர் ஒருவர், காலம் சென்ற தமது அண்ணனின் முதுமை ஓய்வூதியத்தை கடந்த 26 ஆண்டுகளாக வாங்கி உரிமை கொண்டாடி வந்தார்.

1979ல் காலம் சென்ற அவனுடைய அண்ணனின் சாயல் போல இருப்பதால், அவர் இவ்வாறு ஏமாற்றிக்கொண்டிருந்தார். அண்மையில் அவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஒரு லட்சம் யுரோ அபராதம் விதிக்கப்படும் என்று காவற்துறை கூறுகிறது