• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-13 17:07:38    
படிப்பைப் பாதிக்கும் பண்பாடு

cri
சீன மொழியில் ஏராளமான எழுத்துக்கள். அதுவும் அனைத்தும் சித்திர எழுத்துக்கள். எனவே தொடக்கப்பள்ளியில் இருந்து பல்கலைக்கழகம் வனர மனப்பாடம் செய்வது சீனக் கல்வி முறையின் அடிப்படையாகி விட்டது. அது அடிப்படைத் தேவை மட்டுமல்ல, அத்தியாவசியத் தேவையாகவும் ஆகி விட்டது. ஏனெனில் மேற்படிப்பு படிக்கும் போது எண்ணற்ற தகவல்களையும், ஏராளமான புள்ளி விவரங்களையும் நெட்டுருப் போட்டால்தான் மாணவன் தேற முடியும். பெய்ச்சிங் ஒலிபரப்புக்கல் லூரிக்கு நான் செல்லும் போது, திறந்த வெளி விளையாட்டுத் திடலில் பல மாணவர்கள் உரத்த குரலில் மனப்பாடம் செய்வதைக் காண முடிகிறது.

மேலை நாடுகளிலோ இதற்கு நேர்மாறான நிலைமை. பொதுவாக சீன வகுப்பறைகளில் எந்த ஒரு கேள்வி கேட்கப்பட்டாலும், மாணவர்கள் 'ஆம்' என்று தான் பதிலளிக்க வேண்டும். இது எழுதப்படாத விதி. ஆனால் மேலை நாடுகளிலோ, பள்ளி மாணவனிடம் ஆசிரியர் ஒரு விளக்கம் சொன்னால், அவன் 'ஏன்' என்று தான் கேட்கிறான். பட்டப்பகலில் விளக்கை ஏற்றி ஏந்திப்பிடித்த படி தெருத் தெருவாகச் சுற்றி உண்மையைத் தேடிய சாக்ரட்டீஸின் பாதிப்பு காரணமாக, மேற்கத்திய மாணவர்கள் ஏன், எதற்காக, எப்படி என்று கேள்வி கேட்கக்கூடும். ஆனால் இங்கிலாந்து நாட்டில் உள்ள பள்ளிகளில் சீன மாணவர்களும், தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும்தான் கல்விச் சாதனை புரிகின்றனர் என்று ஸிமோன் பஃர்ன்ஹாம் என்ற ஆங்கிலேயர் கூறுகிறார்.

மேலும், மேலை நாடுகளில் இளம் வயதினர் குற்றங்கள் பெருகி வருவதற்கு கல்வி முறையும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. பாடம் தொடர்பாக, மாணவன் ஏன் என்று கேள்வி கேட்டால் பரவாயில்லை. ஆனால் 'ஏன்' கேட்க வேண்டும்? 'ஏன் படிக்க வேண்டும்' ஏன் வேலை செய்ய வேண்டும் என்ற கேள்விகள் இளம் உள்ளங்களில் இருந்து எழும் போது, அது வன்முறைக்கும், குற்றங்களுக்கும் வித்திடுகிறது. எனவே மேலை நாட்டவர்கள் செய்வது எல்லாம் எப்போதும் சரி என்று சொல்லி விடமுடியாது.

நன்மை, ஒழுக்கம் இவற்றின் அர்த்தத்தை ஒருவர் சாக்ரட்டீசுக்கு கற்றுத்தர விரும்பினார். கடைசியில் அறியாமையின் வரம்பை நாம் புரிந்து கொள்வதே உண்மையான அறிவு என்பதை உணர்ந்து கொண்டார். ஆகவே, உலகளாவிய உண்மை என்று எதுவுமே இல்லை. எந்த ஒரு விஷயத்தின் நன்மை, தீமைகளை சீர்தூக்கிப்பார்த்து, சிந்திக்கும் போது தான், நம்மிடம் உள்ள குறைகளை நிரப்ப முடியும். இதன் மூலமே வெவ்வேறு இனங்களும், தேசங்களும், ஒன்றை ஒன்று புரிந்து கொள்ள முடியும். மற்றவர்களை விட நாம் சிறந்தவர்கள் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டால் இந்தப் புரிந்துணர்வு தன்னால் வந்து விடும். இந்த வேளையில், ஆங்கிலக் கவிஞர் டி. எஸ். எலியட்டின் ஒரு வரி நினைவுக்கு வருகிறது.

"தேடல்களை நிறுத்த மாட்டோம்.

எல்லாத் தேடல்களின் முடிவும்

தொடக்கத்தில் முடியும்.

அப்போது தொடக்கத்தை புதிதாகப் புரிந்து கொள்வோம்".