
சிங்காய் மாநிலத்தில் அதிக இயற்கைக் காட்சித் தளங்கள் இருக்கும் அதே வேளையில் வரலாற்றுச் சிறப்பிடங்களும் பலவிதமானவை. பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட சிங்காய் மாநிலத்தில் ஹன் இனம் தவிர, திபெத், மங்கோலிய, வெய், துவு, சரா இனங்கள் உள்ளிட்ட 43 சிறுபான்மை தேசிய இனங்கள் உள்ளன. இவ்வினங்களில் துவு இனமும் சரா இனமும் சிங்காய் மாநிலத்தில் மட்டும் உள்ளன. தேசிய இனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த கட்டடங்கள் மற்றும் உடைகளை அங்கு கண்டுகளிக்கலாம்; அத்துடன், வேறுபட்ட தேசிய இன மக்களின் அறு சுவை உணவு வகைகளையும் சுவைத்துப் பார்க்கலாம்.

தற்போது இம்மாநிலத்தில் மின்னாற்றல் தொழிற்துறை, உப்பு ஏரி வேதியியல் தொழிற்துறை, எண்ணெய் மற்றும் இயற்கை வாயு தொழிற்துறை, இரும்பற்ற உலோகத்தொழிற்துறை ஆகிய 4 முதுகெலும்புத் துறைகளும் உலோகத்துறை, கட்டடப் பொருள், மருத்துவம் மற்றும் மருந்தாக்கம், வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்புப் பொருட்களின் பதனீடு ஆகிய 4 மேம்பாட்டுத் தொழில்களும் துவக்க நிலையில் உருவாகியுள்ளன.
இம்மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டம் பற்றி Jiang Jie Min கூறியதாவது
"அடுத்த 5 ஆண்டுகளில், முதுகெலும்புத் தொழிற்துறையையும் மேம்பாட்டுடன் கூடிய தொழில்களையும் சிங்காய் மாநிலம் மேலும் வளர்ச்சியுறச் செய்யும் என்றார் அவர். சிங்காய் மாநிலம் அதன் அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தை விரைவுபடுத்தி, வணிகரை ஈர்த்து முதலீட்டை உட்புகுத்துவதற்கும் பொருளாதாரத்தின் பெரும் வளர்ச்சியை நனவாக்குவதற்கும் சிறந்த சூழ்நிலையையும் நிலைமையையும் சிங்காய் மாநிலம் உருவாக்க வேண்டும்." என்று அவர் வலியுறுத்தினார்.
|