இன்றைய நேயர் நேரம் நிகழ்ச்சியில் முதல் கடிதம், ஈரோடு நேயர் என்.ராமசாமி எழுதியது. கோடை விடுமுறையில் தனது பாட்டி வீட்டிலிருந்தபடி வேலைக்கு செல்வதால் நிகழ்ச்சிகளை கேட்கமுடியவில்லை என்றாலும் சீன வானொலி நிலையத்திலிருந்து வந்த கடிதங்களை பார்த்து மகிழ்ச்சியடைந்ததாகவும், தனது நண்பர் ஒருவரும் சீன வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு நேயராகிவிட்டார் என்றுன் எழுதியுள்ளார். தனது விருப்ப நிகழ்ச்சிகளான அறிவியல் உலகம், சீன சமூக வாழ்வு, தமிழ் மூலம் சீனம் ஆகியவற்றை கேட்கா முடியாமைக்கு வருத்தமும் கூறியுள்ளார். கோடை விடுமுறை கழிந்து தற்போது நேயர் ராமசாமி நமது நிகழ்ச்சிகளை மீண்டும் தொடர்ந்து கேட்க ஆரம்பித்திருப்பார் என்று நம்புகிறோம். நிகழ்ச்சிகள் மீது நேயர்கள் கொண்டுள்ள ஆர்வம் எம்மை ஊக்கமூட்டுகின்றன. க்ளீட்டஸ்: அடுத்து நீலகிரி கீழ்குந்தா நேயர் கே.கே.போஜன் எழுதிய கடிதத்தில் மார்ச் 13ம் நாள் சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் வேகவைத்த உருளைக் கிழங்கு பற்றிய தகவல் கேட்டதாகவும், கிழங்கை தனியாக வேகவைத்த கீரையுடனும் மற்ற காய்கறிகளுடனும் ஒன்றாக மசித்து, வானலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி பின் மசித்த உருளை,கீரை, காய்கறிகளைக் கிண்டி சாப்பிடும்போது கூட்டுபோல சேர்த்துக் கொண்டால் ருசியாக இருக்கும், இது நீலகிரியில் வாழும் படுக இனமக்கள் காலம் காலமாக செய்து வருகின்றனர். இதை "இண்டிபத்திசித சோப்பூ" என்று அவர்கள் கூறிகின்றனர். நிகழ்ச்சியில் கூறப்பட்ட உணவு தயாரிப்புக்கும் இந்த படுக இனமக்களின் தயாரிப்புக்கும் வித்தியாசங்கள் குறைவே. ஒரு நாட்டில் வாழும் மக்களின் உணவு பழக்கம் மற்ற ந்ந்தாவது நாட்டு மக்களது பழக்கத்தோடு தொடர்புகொண்டிருக்கும் என்பதை உணவு அரங்கம் நிகழ்ச்சி மூலம் தெரிந்துகொண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். வாணி: அடுத்து மார்ச் 20ம் நாள் ஒலிபரப்பான சீன ச்மூகம் நிகழ்ச்சி பற்றி திருவைகாவூர் டி.எம்.முருகானந்தம் எழுதிய கடிதத்தில் மனிதனுக்கு நடை பயணம் எவ்வாறு பயன் தருகிறது என்பதை அறிய முடிந்தது என்றும் நடத்தல் ஆரோக்கியத்தை வளரச் செய்கிறது, தினமும் இந்த வழக்கத்தை பின்பற்றும் முறை மற்றும் இதர விளையாட்டுகள் மூலமான உடற்பயிற்சிகள், யோகாசனம் ஆகியவை பற்றிய சிறப்பான தகவல்களும் பயனுள்ளவையாக இருந்தன என்று கூறியுள்ளார். க்ளீட்டஸ்: அடுத்து நீண்ட இடைவெளிக்கு பின்பு எழுதிய தனது கடிதத்தில் குருணிகுளத்துப்பட்டி சோ.முருகன், சீனத் தமிழொலி இதழ் கிடைக்கபெற்றதாகவும், அதில் 17வது கருத்தரங்கு பற்றி அறியமுடிந்தது என்றும், நிகழ்ச்சிகள் மேலும் அதிகரித்து நேயர்களும் பெருகவேண்டும் என்று வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து மார்ச் 22ம் நாள் அன்ரைய சீனக்கதை நிகழ்ச்சி குறித்து வேலூர் முணுகப்பட்டு கண்ணன் சேகர் எழுதிய கடிதத்தில் சீனாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் டூசின் எழுதிய கதையை தமிழாக்கம் செய்து வழங்கியதை கேட்டதாகவும், கதைகள் சுவாரசியமாக உள்ளன, இதேபோல் சீன எழுத்தாளர்கள் கதையை தொடர்ந்து தரவேண்டும் என்று எழுதியுள்ளார்.
|