• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-15 08:48:44    
உலக கோப்பை கால் பந்துச் செய்திகள்

cri
2006ம் ஆண்டு ஜெர்மன் உலக கோப்பை கால் பந்து போட்டி 14ம் நாள் 6வது நாளாக நடைபெற்று வருகின்றது. போட்டிகள் நடத்தும் நாடான ஜெர்மன் நாட்டு அணி போட்டியின் அடுத்தகட்டமான 16 வலிமைமிக்க அணிகள் வரிசையில் முதலில் நுழைந்துள்ளது. நேற்று தோட்முன்தெனில் நடைபெற்ற ஏ பிரிவின் 2வது சுற்று முதலாவது ஆட்ட போட்டியில் ஜெர்மன் அணி 1:0 என்ற கோல் கணக்கில் பாலாந்தை தோற்கடித்தது. குழுப் போட்டியில் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ள ஜெர்மன் அணி 16 வலிமைமிக்க அணிகளில் ஒன்றாக ஆகியுள்ளது.
நேற்று நடைபெற்ற எச் பிரிவின் குழு ஆட்ட போட்டியில் ஸ்பெயின் அணி 4:0 என்ற கோல் கணக்கில் உக்ரனை தோற்கடித்தது. உக்ரைன் உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.
எச் பிரிவின் இன்னொரு குழுப் போட்டியில் துனிசியா 2:2 என்ற கோல் கணக்கில் சௌதி அரேபியாவை வெற்றி தோல்வியின்றி சமன் செய்தது.