• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-15 22:23:37    
ஓட்டப் பந்தயத்தில் உலக சாதனை

cri

வருகின்ற ஜூலை மாதம் 28ம் நாள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தற்போதைய உலக சாதனையை பகிர்ந்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லினும், ஜமைக்காவின் அசாஃபா பாவல்லும் நேரடொயாக மோதவுள்ளனர். கடந்த மே 12ம் நாள் அசாஃபா பாவல்லின் உலக சாதனை ஓட்டமான 9.77 வினாடிகள் என்ற நேரத்தில் ஓடி தானும் உலக சாதனையாளாரான ஜஸ்டின் காட்லின், இன்று இங்கிலாந்தில் துவங்கும் தடகளப் போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை என்பதால், இந்த இரு வேகமான வீரர்கள் ஒன்றாக களமிறங்கும் வாய்ப்பு தற்போதைக்கு இல்லாமல் போனது. அன்மையில் ஒரே மைதானத்தில் இருவேறு பந்தயங்களில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இருவருமே முதல் இடத்தைப் பிடித்தனர். ஆனால் இருவரும் ஒன்றாக ஓடி ஒருவர் மட்டும் வெற்றியாளாராகும் போட்டிகள் மக்களது கவனத்தை அதிகம் ஈர்க்கக் கூடியவை. அதே காரணத்திற்காகத்தான் வருடத்தில் 2 முறைக்கு மேல், காட்லினோடு நேரடி போட்டியிடுவதில்லை என்பதில் கவனமாக இருக்கிறார் அசாஃபா பாவல்.இருவருக்குமே உலக சாதனையை பகிர்ந்து கொள்வதில் விருப்பமில்லை. தங்களுக்குள்ளான போட்டியின் காரணமாக விரைவில் மீண்டும் உலக சாதனை படைக்கப்படும் என்பதில் இருவருமே ஒத்த கருத்தில் உள்ளனர். நீயா நானா என்ற போட்டியில் உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் பெருமை இந்த இருவருக்குள்ளாகவே இன்னும் கொஞ்ச காலத்திற்கு நீடிக்கும். அடுத்து ஒருவர் புயலாய் புறப்பட்டு வரும்வரை.

பெய்லுன் கோப்பை, பாக்ஸி கோப்பை சர்வதேச பெண்கள் கைப்பந்து வாலிபால் போட்டிகளை வென்ற சீன அணி, தற்போது ஸ்விட்சர்லாந்தில் நடைபெறும் மற்றுமொரு சர்வதேச கோப்பைக்கென விளையாடிக்கொண்டுள்ளது. கடந்த 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் வாலிபால் போட்டியில் இறுதியாட்டத்தில் சந்தித்த ரஷ்ய அணியை சீனா இந்த பெய்லுன் மற்றும் பாக்ஸி கோப்பைகளில் இறுதியில் எதிர்கொண்டது. கடைசியாக பாக்ஸி கோப்பைக்கான இறுதியாட்டத்தில் 3க்கு 2 என்ற செட் கணக்கில் ரஷ்ய பெண்கள் அணியை சீன பெண்கள் அணி வென்றது. தற்போதைய சீன அணியில் இடம்பெறும் 15 பேரில் 12 பேர் வருகின்ற நவம்பரில் துவங்கும் உலக சாம்பியன்ஷிப் போடிகளுக்கான அணியில் இடம்பெறுவார்கள்.

ஐந்தாயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் எத்தியோப்பிய நாட்டு வீராங்கனை மெஸரட் டெஃபார். 5000 மீட்டரை 14 நிமிடம், 24.53 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார் 22வய்து டெஃபார். ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 5000ம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கத்தை வென்ற டெஃபார், கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிகளின்போது இரண்டாவாது இடத்தை பிடித்தார். இதற்கு முன்பு 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சாதனைப் படைத்தவர் துருக்கி நாட்டு எல்வான் அபேலெகேஸே. 2004ம் ஆண்டில் 14 நிமிடம் 24.68 வினாடிகளில் இவர் படைத்த உலக சாதனையை தற்போது எத்தியோப்பியாவின் மெஸரட் டெஃபார் 0.15 வினாடிகள் குறைவான நேரத்தில் ஓடி புதிய சாதனை படைத்துள்ளார்.