• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-16 23:01:07    
உலகக் கோப்பை கால்பந்து போட்டி

cri

விளையாட்டு உலகத்தின் மொத்த கவனமும் தற்போது ஜெர்மனியில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் மீதுள்ளது. கடந்த 9ம் நாள் தொடங்கிய இந்த போட்டியில் இதுவரை 26 பந்தயங்கள் நடந்தேறியுள்ளன. மொத்தம் 64 பந்தயங்கள் கொண்ட இந்த போட்டி வரும் ஜூலை 9ம் நாள் நிறைவுபெறும். 8 குழுக்களாக பிரிந்து தங்களுக்குள்ளாக விளையாடி ஒவ்வொரு குழுவிலும் தலை சிறந்த 2 அணிகள் கோப்பைக்கான போட்டியின் அடுத்த கட்டத்திற்கு தேர்வாகும். வருகின்ற 24ம் அன்று அடுத்த கட்ட போட்டிக்கு தேர்வாகும் 16 அணிகள் எவை என்பது தெளிவாகும். இதுவரை நடைபெற்ற 26 பந்தயங்களின் முடிவுகள்:

ஜெர்மனி, கோஸ்டா ரிக்கா, போலந்து, ஈகுவடோர் ஆகிய நாடுகள் அடங்கிய குழுவில், ஜெர்மனி கோஸ்டா ரிக்கா இடையிலான பந்தயத்தில் 4- 2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வெற்றி பெற்றது. போலந்து ஈகுவடோர் இடையிலான பந்தயத்தில் 2-0 என்ற வித்தியாசத்தில் ஈகுவடோர் அணி வெற்றி பெற்றது. ஜெர்மனி போலந்து இடையிலான போட்டியில் 1-0 என்ற வித்தியாசத்தில் ஜெர்மனி அணி வெற்றி பெற்றது மற்றொரு போட்டியில் ஈகுவடோர் 3-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிக்காவை வென்றது.

இங்கிலாந்து,பராகுவே,ட்ரினிடாட் மற்றும் டொபேகோ, ஸ்வீடன் ஆகிய நாடுகள் அடங்கிய குழுவில், பராகுவே அணியை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது, ட்ரினிடாட் மற்றும் டொபேகோவுக்கும் ஸ்வீடனுக்கும் இடையிலான பந்தயம் எந்த அணியும் கோல் போடாமல் சமன் ஆனது, இங்கிலாந்துக்கும் ட்ரினிடாட் மற்றும் டொபேகோவுக்கும் இடையிலான பந்தயத்தில் 2-0 என்ற வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. ஸ்வீடன் பராகுவே அணிகளுக்கிடையிலான மற்றோரு பந்தயத்தில் 1-0 என்ற நிலையில் ஸ்வீடன் வெற்றி பெற்றது.

அர்ஜென்டினா,செர்பியா மான்டநீக்ரோ,நெதர்லாந்து,கோட்டேவ (ஐவரி கோஸ்ட்) அணிகள் அடங்கிய குழுவில், அர்ஜென்டினா கோட்டேவ இடையிலான பந்தயத்தில் 2- 1 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது, மற்றொரு போட்டியில் நெதர்லாந்து அணி செர்பியா மான்டநீக்ரோ அணியை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மெக்சிகோ,ஈரான்,அங்கோலா,போர்ச்சுகல் ஆகிய நாடுகள் இடம்பெற்ற குழுவில், மெக்சிகோ இர்ரான் இடையிலான பந்தயத்தில் 3- 1 என்ற வித்தியாசத்தில் மெக்சிகோ வெற்றிபெற, அங்கோலா போர்ச்சுகல் இடையிலான பந்தயத்தில் 1-0 என்ற கணக்கில் போர்ச்சுகல் வெற்றி பெற்றது.

இத்தாலி,கானா,அமெரிக்கா,செக் குடியரசு ஆகிய நாடுகள் அடங்கிய மற்றொரு குழுவில் இத்தாலி கானா இடையிலான பந்தயத்தில் 2-0 என்ற கணக்கில் இத்தாலியும், அமெரிக்கா செக் குடியரசு இடையிலான பந்தயத்தில் 3-0 என்ற கணக்கில் செக் குடியரசும் வெற்றி பெற்றன.

ப்ரேசில்,ஆஸ்திரேலியா,க்ரோவேஷியா,ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்ற குழுவில் க்ரோவேஷிய அணியை 1-0 என்ற கணக்கில் ப்ரேசிலும், ஆஸ்திரேலியா ஜப்பான் இடையிலான பந்தயத்தில் 3- 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன.

ஸ்விட்சர்லாந்து,தென்கொரியா,பிரான்ஸ்,டோகோ ஆகியவை இடம்பெற்ற குழுவில், பிரான்ஸ் ஸ்விட்சர்லாந்து இடையிலான பந்தயம் கோல் ஏதுமின்றி எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி முடிய, தென்கொரியா டோகோ இடையிலான பந்தயத்தில் தென் கொரியா 2- 1 என்ற நிலையில் வெற்றி பெற்றது.

ஸ்பெயின்,உக்ரேன்,துனிசியா,சவுதி அரேபியா ஆகிய நாடுகள் அடங்கிய குழுவில், ஸ்பெயின் 4-0 என்ற கணக்கில் உக்ரேனை வெற்றிபெற துனிசியாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான பந்தயம் தலா 2 கோல் என்ற நிலையில் எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி முடிவுபெற்றது.

வெள்ளியன்று இரவு வரையிலான அணிகள் பெற்ற புள்ளிகளின் விபரம்:

ஈகுவடோர், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகியவை தலா 6 புள்ளிகள் பெற்றுள்ளன. ஸ்வீடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அர்ஜென்டினா,நெதர்லாந்து,மெக்சிகோ,போர்ச்சுகல்,செக் குடியரசு,இத்தாலி, ஆஸ்திரேலியா, பிரேசில்,தென்கொரியா, ஸ்பெயின் ஆகியவை தலா 3 புள்ளிகள் பெற்றுள்ளன.

ட்ரினிடாட் மற்றும் டொபேகோ, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து. சவுதி அரேபியா, துனிசியா ஆகியவை தலா ஒரு புள்ளியை பெற்றுள்ளன.

அடுத்த வாரம் விளையாட்டுச் செய்திகளில் போட்டியின் அடுத்த கட்டத்துக்கு தேர்வு பெற்ற அணிகள் பற்றிய விபரங்கள் இடம்பெறும்.