• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-19 08:38:12    
பல்வேறு விசித்திரமான கட்டிடங்கள்

cri

நடனமாடும் கட்டிடம்

செக்கின் தலைநகரான பிராக்கில் பெரும் சர்ச்சைக்குரிய கட்டிடங்களில் ஒன்றாக இந்த நடனமாடும் கட்டிடம் விளங்குகிறது. 1992 முதல் 1995 வரை கட்டி முடிக்கப்பட்டத்தை இரண்டு சிற்பிகள் வடிவமைத்தார்கள். வளைந்து நெரிந்திருக்கும் அதன் வடிவம் நடனமாடுவது போல் இக்கட்டிடம் தோற்றமளிக்கிறது.

வெல்சன் கட்டிடம்

இக்கட்டிடம், 1971 முதல் 1974 வரை கட்டி முடிக்கப்பட்டது. அதன் பகுதி நடுவில் TRAPEZIUM ஊசு தண்டு வடிவில் அமைந்துள்ளது. இக்கட்டிடத்தில் பல சோதனை அறைகள் உண்டு. பல்வகை விசித்திரமான சோதனைகளை அங்கு செய்யலாம். 1500 அறிவியலாளர்களின் பணி தேவையை அவை நிறைவு செய்ய கூடியவை.

இயந்திர மனிதர் போன்ற கட்டிடம்

தாய்லாந்து தலைநகரான பாங்காக்கில் அமைந்துள்ள ஆசிய வங்கி கட்டிடம், 1985ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. அது இயந்திர மனிதர் போன்ற வெளி தோற்றத்தால் நவீன வங்கியின் சின்னமாக அது கருதப்படுகிறது.

ரிபுரி கட்டிடம்

1998ல் கட்டிமுடிக்கப்பட்ட இக்கட்டிடம், அமெரிக்காவின் ஒர்லாந்தோ மாநகரில் உள்ளது. இக்கட்டிடம் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட விரிசல் காணப்படும் கட்டிடம் போல் வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. 1812ம் ஆண்டில் நிகழ்ந்த பெரிய நில நடுக்கத்தின் நினைவாக அது கட்டப்பட்டுள்ளது.

சோபிஃத் உணவு விடுதி

ஜப்பானின் சோக்கியோ நகரில் அது அமைந்துள்ளது. பாரம்பரிய கோயிலை மனதில் கொண்டு இக்கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உணவு விடுதியில் 70க்கும் அதிகமான அறைகளும் 11 செட் வீடுகளும் உயர் அறிவியல் தொழில் நுட்பத்துடன் கூடிய 5 கூட்ட மண்டபங்களும் உண்டு.

அற்புதமான பணி கட்டிடம்

இக்கட்டிடம் அமெரிக்காவின் பிரோரிதா மாநிலத்தில் அமைந்துள்ளது. தொலை தூரத்தில் இக்கட்டிடத்தைப் பார்த்தால் அது மற்றொரு தாழ்வான சிறி கட்டிடத்தின் மீது சாய்ந்திருப்பது போல் தோன்றும். இக்கட்டிடத்தில் 100 விந்தையான கண்காட்சிகள் நடைபெறுகின்றன. குடும்பத்தினர் அனைவரும் அவற்றைப் பார்ப்பதற்கு உரியவை.

வளைந்த நெளியும் வீடுகள்

போலாந்து நாட்டின் சோபொட் நகரில் அவை மும்முரமாக வியாபாரம் நடைபெறும் சிறப்பு அங்காடியின் சார்பு கட்டிடங்களாக மாறியுள்ளது. உள்ளூர் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகவும் அது விளங்குகின்றது. 2004ல் கட்டிமுடிக்கப்பட்ட இக்கட்டிடம் வளைந்து நெளியும் மடிப்பு வடிவில் அமைந்துள்ளது.