அடுத்த ஐந்து ஆண்டுகளில் சீனாவின் முக்கிய வளர்ச்சி குறிக்கோளில், வட சீனக் கடலோர மாநகரமான தியான்சினின் பின்ஹேய் மண்டல வளர்ச்சி முக்கியமானது. திட்டத்தின் படி, இம்மண்டலம், உயர் நிலை நவீன தயாரிப்புத் தளமாகவும், சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் பின்னணி சேவை மையமாகவும், நட்பான சுற்று சுழலைக்கொண்ட நவீனமயமாக்க பொருளாதார மண்டலமாகவும் மாறும். பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்று சூழலின் ஒருங்கிணைந்த வளர்ச்சி, இம்மண்டலத்தின் எதிர்கால கட்டுமான இலக்காகும்.
பின்ஹேய் மண்டலத்தின் கட்டுமானம், கடந்த நூற்றாண்டின் 90ம் ஆண்டுகளில் முன்வைக்கப்பட்டது. அதன் முக்கிய பகுதியாக தேடா திறப்பு வளர்ச்சி மண்டலம், 1980ம் ஆண்டுகளில் துவக்கப்பட்டது. தொடர்ந்து பல ஆண்டுகளாக, சீனாவின் வளர்ச்சி மண்டலங்களில், தேடாவின் ஒட்டுமொத்த ஆற்றல், முதலிடம் பெற்றுள்ளது.
உலகளவில் புகழ்பெற்ற தொலைத்தொடர்பு தொழில் நிறுவனமான MOTOROLA, 1994ம் ஆண்டில் தேடா மண்டலத்தில் செல்லிட பேசி உற்பத்தி தொழிற்சாலையை நிறுவியது. எமது செய்தியாளரிடம் பேசிய, இந்நிறுவனத்தின் பிரச்சார மற்றும் பொது அலுவல் பிரிவின் தலைவர் யாங் போ நிங், இத்தொழிற்சாலை, MOTOROLA வின் மிகப்பெரிய உற்பத்தி தளமாகும். தவிர, இங்கே ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பணியை, MOTOROLA, தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது என்றார். அவர் மேலும் கூறியதாவது:
தேடாவிலுள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட செல்லிட பேசிகள், உலகெங்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
தேடா வளர்ச்சி மண்டலம் தொடர்ந்து வளர்ச்சியடைந்த அடிப்படையில், உள்ளூர் வட்டார மேம்பாட்டை, போதியளவில் பயன்படுத்தி, மேலும் மாபெரும் வளர்ச்சியடைய பின்ஹேய் மண்டலத்தின் திட்ட வரைவாளர்கள் யோசிக்கின்றனர். இவ்வட்டாரத்தில் சீனாவின் மிகபெரிய செயற்கை துறைமுகமான தியான் சின் துறைமுகமும், வரி விலக்கு மண்டலமும் இருப்பதால், கப்பல் போக்குவரத்து மற்றும் பின்னணி சேவைத்துறையின் வளர்க்கு, மிக வசதியாக இருக்கிறது.
கடந்த ஆண்டு வரை, சுமார் 5700 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள், தியான்சின் வரி விலக்கு மண்டலத்தில் அமைந்துள்ளன. இதில், சீனாவில் மிகப்பெரிய தானிய மற்றும் எண்ணெய் பதனீட்டு தளமும், தக்காளி உற்பத்திப்பொருள் ஏற்றுமதி பதனீட்டு தளமும், நிறுவப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில், பின்ஹேய் மண்டலம், தியான்சின் துறைமுகத்தையும், வரி விலக்கு மண்டலத்தையும் தொடர்ந்து விரிவாக்கி, அதன் திறனை வலுப்படுத்தும். தியன் சின் மாநகரின் போக்குவரத்து கமிட்டி இயக்குநர் லீயு மீங் தே கூறியதாவது:
தியன்சின் துறைமுகம், 2 லட்சத்து 50 ஆயிரம் டன் அளவான கப்பல் பாதையை நிறுவி, ஆண்டுக்கு 30 கோடி டன் சரக்குகளைக் கையாளும். முன்னேறிய சாதனங்களைக் கொண்ட, நவீனமயமாக்க சர்வதேச துறைமுகமாகவும், வடக்கிழக்காசியாவை நோக்கிய கொள்கல கப்பலுக்கான தங்கு துறைமுகமாகவும், மாறும் என்றார் அவர்.
தற்போது, தியன்சின் மாநகரின் பின்ஹேய் மண்டலத்தில், மின்னணு தகவல், கார் தயாரிப்பு, எண்ணெய் வேதியியல், உயிரின தொழில் நுட்பம், நவீன மருந்து, புதிய எரியாற்றல் வளர்ச்சி முதலியவற்றை முதுகெலும்பாக கொண்ட, தொழில் துறை கட்டமைப்பு உருவாயிற்றது. ஆனால், பொருளாதார வளர்ச்சியுடன் ஒருங்கிணைந்த பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச் சூழல் வளர்ச்சியை நிலைநிறுத்த கவனம் செலுத்தப்பட வேண்டும். கழிவு உருக்கு மீண்டும் உருக்கப்படுவது, தொழில் துறையின் கழிவுகள் கையாள்வது முதலிய சுற்று சூழல் திட்டப்பணிகளின் வளர்ச்சி, இம்மண்டலத்தில் ஆதரவைப் பெற்றுள்ளது. தற்போது, இம்மண்டல்ததிலுள்ள 500க்குக் கூடுதலான கிலோமீட்டர் சதுப்பு நிலம், பயனுள்ள முறையில் பாதுகாக்கப்பட்டது. அதன் பசுமைமயமாக்கல், 35 விழுக்காட்டை எட்டியது. மண்டலத்தில் கழிவு நீர் கையாளப்பட்ட பின், நீர் தரம், குடிநீர் வரையறையைத் தாண்டியுள்ளது.
|