நீர் ஆற்றல், காற்று ஆற்றல், சூரிய வெப்ப ஆற்றல் உள்ளிட்ட புதுப்பிக்கப்படக்கூடிய எரியாற்றல், எரியாற்றல் நுகர்வில் வகிக்கும் விகிதாசாரத்தை சீனா பெருமளவில் உயர்த்தும் என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்தக் கமிட்டியைச் சேர்ந்த எரியாற்றல் பகுதித் தலைவர் Xu Ding Ming கூறியுள்ளார். இன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய அவர், புதுப்பிக்கப்படக்கூடிய எரியாற்றல் தொழில் நுட்பங்களின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை ஆதரிக்கும் வகையில், புதுப்பிக்கப்படக்கூடிய எரியாற்றல் வளர்ச்சிக்கான சிறப்பு நிதியத்தை அரசு உருவாக்கும் என்றார். தவிர, புதுப்பிக்கப்படக்கூடிய எரியாற்றல் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டில் ஈடுபடும் தொழில் நிறுவனங்களுக்கு வரிவசூலிப்பில் முன்னுரிமைச் சலுகையை வழங்கி, இத்தொழில் விரைவாக வளர்வதை ஆதரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
|