ஜுன் 17ம் நாள், பாலைவனமயமாதல் மற்றும் வறட்சி தடுப்புக்கான உலக நாளாகும். சீனாவின் வடமேற்கு, வடக்கு மற்றும் வட கிழக்கு பகுதிகளில் வனப் பாதுகாப்பு மண்டல திட்டப்பணிக்கு உதவியாக, அந்நிய அரசாங்கங்களும் சில சர்வதேச அமைப்புகளும் இவ்வாண்டின் துவக்கம் வரை 150 கோடி யுவான் ரெ மின் பி அளித்துள்ளதாக, எமது செய்தியாளர் அண்மையில் தெரிவித்திருக்கின்றார். இது வரை அங்கு இரண்டு கோடியே 50 லட்சம் ஹேக்டர் நிலத்தில் மரங்கள் நடப்பட்டுள்ளன. இதனால், உள்ளூர் உயிரின வாழ்க்கைச்சூழல் படிப்படியாக மேம்பட்டு வருகின்றது. வடப்பகுதியின் உயிரின வாழ்க்கைச்சூழலை மேம்படுத்துவதற்காக, வனப் பாதுகாப்பு மண்டல திட்டப்பணி சுமார் 50 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
|