சீனாவில் சிங்ஹாய்-திபெத் இருப்புப்பாதை கட்டிமுடிக்கப்பட்டு போக்குவரத்தில் இறங்கிய பின், தொடர் வண்டி உறைபனி நிலத்தில் ஓடும் வேகம், மணிக்கு 100 கிலோமீட்டரை எட்டும். உலகில் பீடபூமியின் உறைபனி நிலத்தில் தொடர் வண்டி மணிக்கு ஓடும் மிக விரைவான வேகம் இதுவாகும். சுமார் ஈராயிரம் கிலோமீட்டர் நீளமான சிங்ஹாய்-திபெத் இருப்புப்பாதை, "உலக உச்சி" எனப்படும் சிங்ஹாய்-திபெத் பீடபூமிக்கூடாகச் செல்கின்றது. 550 கிலோமீட்டர் நீளமான உறைபனி நிலத்தில் ஓடிய இந்த இருப்புப்பாதை, உலகில் மிகக் கூடுதலான உறைபனி நிலத்தைக் கடந்து சென்ற பீடபூமி இருப்புப்பாதையாகியுள்ளது. கடந்த அக்டோபர் திங்களில் இருப்புப்பாதை கட்டிமுடிக்கப்பட்டு, ஜூலை திங்கள் முதலாம் நாள் போக்குவரத்தில் இறங்கும்.
|