• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-20 17:04:20    
கீரை கலந்த காளான் கறி

cri

கலை.....வணக்கம் நேயர்களே. இப்போது சீன உணவு அரங்கம் நேரம். ராஜாராம், கலையரசி இருவரும் இந்த நிகழ்ச்சியில் கீரை கலந்த காளான் கறி சமைப்பது பற்றி விளக்குகின்றோம்.

ராஜா.....கடந்த வாரத்தில் நூடுஸ் தயாரிப்பு பற்றி கூறினோம். இன்றைய உணவு அரங்கத்தில் கொஞ்ச மாற்றம் செய்யலாமே.

கலை.....உங்களுக்கு என்ன பிடிக்கும்? சீனாவில் தங்கியிருக்கின்ற போது சீன நண்பர்களின் செல்வாக்கு உங்களுக்கு ஏற்பட்டுவிட்டது. அப்படிதானே.

ராஜா.....ஆமாம். ஊரில் இருந்த போது முட்டைக் கோஸ் பருப்பு, கீரை உருளை கிழங்கு, கத்தரிகாய் ஆகியவற்றை மாறிமாறி உண்டேன். பெய்சிங்கு வந்த பிறகு காய்கறி உண்ணும் வழக்கம் முழுமையாக வித்தியாசமாக மாறிவிட்டது.

கலை......ஆமாம். தமிழ் நாட்டில் பெண்கள் சமைக்கும் போது அரிவாள்மணையில் காய்கறிகளை நறுக்கி சமைக்கிறார்கள். சீன நாட்டில் அரிவாள்மணை கிடைக்காது. நீங்கள் பாருங்கள். நீங்கள் இப்போது பயன்படுத்தும் கத்தி சீனாவில் தயாரிக்கப்பட்டது. அப்படிதானே.

ராஜா....ஆமாம்.

கலை.....ஆகவே இப்போது சீன பாணியில் கீரை கலந்த காளான் கறி சமைப்பது பற்றி வித்தியாசமாக சொல்லலாமா? காளான் மக்கள் வாழ்க்கையில் அடிக்கடி பயன்படுத்தும் உலர்ந்த காய்கறி. காளானை நிலத்திலிருந்து பிடுங்கி எடுத்து அப்படியே சமைக்கலாம்.

ராஜா.... கீரை கலந்த காளான் கறி எனக்கு பிடிக்கும். ஆனால் சமைப்பது எப்படி என்று எனக்கு தெரியாது.

கலை....சரி சொல்கிறேன். காளான் கீரை, தேவைக்கேற்ற உப்பு, சுவையான சோயாசாஸ், பூண்டு, இஞ்சி, நல்லெண்ணெய்.

ராஜா....இவளவு பொருட்கள் போதுமா? கீரைகலந்த காளான் கறி சமைப்பதற்கு?

கலை.....போதும்.