• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-20 17:04:20    
அறிவியல் முறையில் தண்ணீர் குடிப்பது

cri

கிளீட்டஸ்......அப்படியிருந்தால் நாம் உதாரணங்களை எடுத்துக் கூறி தண்ணீர் குடிப்பதிலான அறிவியல் தன்மையை நண்பர்களுக்கு விளக்குவதன் மூலம் தண்ணீரை அறிவியல் முறையில் குடிப்பதன் முக்கியத்துவத்தை சொல்வது நமது கடமையாக இருக்கும். அப்படிதானே?

கலை......ஆமாம். வாழ்க்கையில் எதிர்பாராத விடயங்கள் அடிக்கடி நிகழும். எடுத்துக்காட்டாக ஆளுக்கு ஒரே மூச்சில் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பது எளிதான வேலையல்ல. ஆனால் சீனாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள சுங்சின் நகரில் வாழ்கின்ற இளைஞர் யூக்கென்சியுன் இந்த வேலையை செய்ய முடியும். அவர் ஒரு நாளுக்குள் 25 லிட்டர் தண்ணீர் குடிக்கிறார்.

கிளீட்டஸ்.....சாதாரண மக்கள் அவரைப் போல இப்படி தண்ணீர் குடிப்பது கஷ்டம் தான். ஆனால் அவரால் முடியும். இதற்கு கண்டிப்பாக காரணம் உண்டு.

கலை......நீங்கள் யூகித்து சொன்னது சரிதான். 4 திங்களுக்கு முன் சாலை விபத்தில் அவர் கடுமையாக காயமுற்றார். சிகிச்சை பெற்ற பின் உயிர் காப்பாற்றப்பட்டது. ஆனால் அற்புத விடயம் ஏற்பட்டது. இது பற்றி அவர் கூறியதாவது.

கிளீட்டஸ்......நிறைய தண்ணீர் குடித்த பின் உடம்புக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. ஆனால் இன்னும் தாகம் உணர்ச்சி ஏற்படும் நிலையில் தொடர்ச்சியாக தண்ணீர் குடிக்க வேண்டும். பசியிருந்தாலும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற உணர்வு என்னை இன்னல்படுத்தியுள்ளது.

கலை.......குறுகிய 4 திங்களில் தண்ணீர் குடிக்கும் அளவு அதிகரித்துள்ளது. உட்கொள்ளும் உணவு பொருட்களவு குறைந்துவிட்டது. சத்து பற்றாக்குறை ஆதலால், அவருக்கு 10 கிலோகிராம் எடை குறைந்தது.

கிளீட்டஸ்.....டாக்டரை பார்க்க வேண்டும்.

கலை....பார்த்தார். சாலை விபத்தில் காயமுற்ற அவரின் மூளை பாதிக்கப்பட்டதன் காரணமாக அவருக்கு சிறுநீர் கட்டுபடுத்த முடியாத நோய் ஏற்பட்டது. டாக்டர் லீ இது பற்றி விளக்கி கூறுகிறார்.

 

கிளீட்டஸ்......மனிதரின் மண்ணீரல் அணைக்கட்டு போல இருக்கின்றது. உடம்பிலிருந்து தண்ணீர் வெளியேறுவதை இது தடுக்கும். இந்த அணைக்கட்டு மூளையிலுள்ள ரத்தத்திலான அழுத்த காரணி என்பதால் கட்டுபடுத்தப்படுகின்றது. இந்த அணைக்கட்டு கட்டற்ற முறையில் இருந்ததால் இளைஞர் யூக்கென்சியுங் தொடர்ச்சியாக தண்ணீர் குடிக்க வேண்டிய உணர்வு ஏற்படுகிறது. அப்போது பெருமளவிலான தண்ணீர் உடம்பிலிருந்து வெளியே செல்லும்.


1  2