 கலை....வணக்கம் நேயர்களே. இப்போது நல வாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி நேரம்.
கிளீட்டஸ்......கலை. இன்றைய நிகழ்ச்சியில் நாம் இருவரும் நண்பர்களுக்கு தண்ணீர் எப்படி குடிப்பது என்பது பற்றி சொல்லலாமா?
கலை.....கண்டிப்பாக சொல்லலாம்.
கிளீட்டஸ்.....தண்ணீர் மனித உடம்பில் ஒரு மிக முக்கிய பகுதியாகும். அல்லவா?
கலை.....ஆமாம். உடம்பில் 15 விழுக்காட்டு தண்ணீர் பற்றாக்குறையிருந்தால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?
களீட்டஸ்.....தெரியும். ஆகவே அனைவரையும் பொருத்தவரையில் தண்ணீர் குடிப்பது அன்றாட வாழ்க்கையில் செய்ய வேண்டிய முக்கியமான விடயமாகும்.
கலை......ஆனால் இது பற்றி பலருக்கு தெரியாது. எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும்? நாளுக்கு எத்தனை முறை தண்ணீர் குடிக்க வேண்டும்?ஒரு முறை எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? போன்ற நுணுக்கமான விடயங்களில் பொதுவாக மக்கள் கவனம் செலுத்துவதில்லை.
கிளீட்டஸ்......ஆமாம். அறிவியல் முறையிலும் ஒழுங்கான முறையிலும் தண்ணீர் குடிப்பது என்பது சுயவிருப்பத்தின் படி தண்ணீரை குடிப்பதை விட சிறப்பானது. உடல் நலனுக்கு நன்மை புரியும்.
கலை.....ஆமாம். ஆகவே அறிவியல் முறையில் தண்ணீர் குடிப்பது பற்றி அறிந்து கொள்வது மிக அவசியமானது.
1 2
|