சீனாவில் சிங்ஹாய்-திபெத் ரயில் பாதையின் இறுதி நிலையமான லாசா ரயில் நிலையம் இன்று முடிவடைந்தது. லாசா ரயில் நிலையம், சிங்ஹாய்-திபெத் இருப்புப்பாதையின் மிகப் பெரிய நிலையாக மட்டுமல்ல, இத்திட்டத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. கடல் மட்டத்திலிருந்து 3600 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம், மிகப் பெரிய பயணி மற்றும் சரக்கு போக்குவரத்து நிலையமாகும். பயணிகளுக்கு பிராணவாயு பற்றாக்குறை, களைப்பு முதலியவற்றைப் போக்கும் வகையில், நிலையத்துக்கு போய் வரும் நேரத்தைக் குறைப்பதற்காக லிப்ட்டு போடப்படும். அதே வேளையில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு, மாசுபடுத்தாத சூரிய ஒளி ஆற்றல் பயன்படுத்தப்படும்.
|