• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-21 08:53:10    
கருத்துக்களும் யோசனைகளும்

cri

வாணி: ஆரணி த. ராணி மார்ச் 28ம் நாள் நிகழ்ச்சி பற்றிய தன் கடிதத்தில் சீனாவில் இன்ப பயணம் நிகழ்ச்சியில் சிற்றுண்டி உணவகம் பற்றிய தகவல் கேட்டதாகவும், தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி பயனுள்ள உரையாடல் ஆனால் சீன மொழி கற்க கடினமாக உள்ளது ஆனால் முயற்சி இருந்தால் எதையும் சாதிக்க முடியும் எனவே தாமும் தினமும் முயற்சி செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். நேயர் ராணி அவர்களே, தாங்கள் கூறியது போல முயற்சி இருந்தால் எதையும் சாதிக்க முடியும். சீன மொழியை நீங்கள் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.

க்ளீட்டஸ்: புதிதாக தன்னை இணைத்துக் கொண்டமைக்கு நன்றி தெரிவித்து எழுதிய கடிதத்தில் இலங்கை சாய்ந்தமருது நேயர் எச்.எம்.அஸ்ஸாம் தொடர்ந்து சீன வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு வருவதாகவும், வானொலியோடு தான் இணைந்துவிட்டதாகவும் , நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும் நேரம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் தனக்குள் ஏற்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார். காத்தான்குடி நேயர் எம்.எஸ்.அஷ்ஃபக் எழுதிய கடித்ததில் சீனாவைப் பற்றிய பல விடயங்களை நிகழ்ச்சிகள் மூலம் அறிய முடிகிறது குறிப்பாக சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சியை தான் தொடர்ந்து கேட்டுவருவதாகவும், தற்போது நிகழ்ச்சிகள் மறுநாள் காலை இரண்டு முறை ஒலிபரப்பாவது மகிழ்ச்சி தரும் விடயம் என்றும் கூறியுள்ளார்.

வாணி: அடுத்து கடையாலுருட்டி நேயர் எம். பிச்சைமணி எழுதிய ஏப்ரல் 7ம் நாளன்றைய நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி பற்றிய கடிதம். அலுவலக பரபரப்பு பற்றிய தகவல்களை கேட்டோம்.அலுவலகம் வந்ததும் உடனே வேலை செய்யமுடியாது, பரபரப்பு ஏற்படும் எனவே சில நிமிடங்கள் அமைதியாக இருந்துவிட்டு வேலை செய்ய துவங்கவேண்டும். மேலாளர் அடிக்கடி வந்து பார்த்தல், குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடிக்கவேண்டும் என்ற வற்புறுத்தல் ஆகியவை மன அழுத்ததை ஏற்படுத்தும், நீண்டநேரம் அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பதும் களைப்பை ஏற்படுத்தும் என்ற கருத்துக்கள் அனைத்தும் உணமையே. தரமான தூக்கமே நல்வாழ்விற்கு அடிப்படை என்பது உண்மை. படுத்துக்கொண்டு சிந்திக்ககூடாது, தூக்கம் வரும்போது படுக்கைக்கு செல்லவேண்டும். நலவாழ்வு வாழ வழிகூறும் சீன வானொலிக்கு நன்றிகள், பாராட்டுக்கள் என்று கூறியுள்ளார்.