• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-21 09:43:49    
பிச்சைக்காரனைக் கண்டு பயந்த புலி

cri
ஒரு பிச்சைக்காரத் துறவியும் ஒரு கொள்ளைக்காரனும் காட்டு வழியே போய்க் கொண்டிருந்தனர். சாமியாரின் கையில் திருவோடும், கொள்ளையின் கையில் வில்லும் அம்பும் இருந்தன. அப்போது திடீரென ஒரு புலி எதிர்ப்பட்டது. கூடவே அதனுடைய குட்டி புலி உறுமிக் கொண்டு பாய முற்பட்ட போது கொள்ளையன் வில்லைவளைத்து அம்பு தொடுத்தான். புலி பயப்பட வில்லை. பலமாக உறுமியது. உடனே சாமியார் தனது திருவோட்டை எடுத்து நீட்டினான். புலி அரண்டு போய், குட்டியை இழுத்துக் கொண்டு ஓடி ஒளிந்தது.

புலிக்குட்டி கேட்டது—

"அப்பா, கொள்ளையனோட அம்புக்கு பயப்படாத நீங்க அந்த சாமியாரைப் பார்த்து ஏன் பயந்து போனீங்க?"

அதுக்கு புலி பதில் சொன்னது—

"மகனே, கொள்ளையன் வந்தப் போ, அவன் மேலே பாய்ஞ்சிறலாம்னு தயாரானேன். ஆனா அந்தச் சாமீயார் திருவோட்டை நீட்டிட்டான். அவனுக்கு பிச்சைபோட்டு நமக்கு கட்டுபடியாகுமா சொல்லு."

சாபம் கொடுத்த சாமி

சீனாவின் ஒரு கிராமப்புறத்தில் ஒரு பழைய கோயில் இருந்தது. அந்தக் கோயிலில் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு சாமி சிலை இருந்தது. அது ரொம்பவும் துடியான சாமி. அது சாபம் கொடுத்தா நிச்சம் பலிக்கும்.

ஒரு நாள் அந்த வழியாக ஒரு ஆள் வந்தான். கோயிலுக்கு முன்னால் ஒரு பெரிய பள்ளம் சாலையைக் கடக்க முடியவில்லை. உடனே விடுவிடென்று கோயிலுக்குள் போனான். சாமி சிலையைக் கொண்டு வந்து பள்ளத்திற்குக் குறுக்காகப் போட்டு, அதன்மீது ஏறி நடந்து சென்றான்.

கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு ஆள் அந்தப் பக்கமாக வந்தான். சாமி சிலை ஒரு பாலம் போல பள்ளத்தில் கிடப்பதைப்பார்த்து பதறிப்போய்,

"அடப்பாவிகளா, யார் சாமியைக் கொண்ணாந்து இங்க போட்டது?" என்று புலம்பியபடியே, அந்தச் சிலையை பயபக்தியோடு தூக்கிக் கொண்டு போய் பீடத்தில் நிறுத்தினான். தனது வழியில் செல்ல அவன் புறப்பட்ட போது, சாமிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

"அட மடையா சாமி சிலையை கொண்ணாந்து பீடத்துல வச்சியே. ஊது வத்தி கொஞ்த்தினியா? நீ தீராத தலைவலியால கஷ்டப்படு," என்று சாபம் கொடுத்துவிட்டது. துடியான சாமி அல்லவா? அவனும் தலைவலியால் துடித்தான்.

இதைக் கண்டதும் கோயில் பூசாரிக்கு பொறுக்கவில்லை.

"என்னய்யா அநியாயம் இது? ஒருத்தன் உன்னை கொண்டு போய் பள்ளத்துல போடுறான். அவனை ஒண்ணும் பண்ணலை இன்னொருத்தன் பள்ளத்தில் கிடந்த உன்னை திரும்பக் கொண்ணாந்து கோயில்ல வைக்கிறான். அவனுக்கு சாபம் தர்றியே! என்ன நியாயம் இது?" என்று கோபத்தில் கொந்தளித்தான்.

அதுக்கு அந்த சாமி ரொம்ப சாந்தமாகப் பதில் சொன்னது.

"இங்தா பாருப்பா பூசாரி. நல்ல மனசு உள்ளவங்களைத்தான் பயமுறுத்தி நம்ம சக்தியைக் காட்ட முடியும்."