• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-22 16:52:39    
உலகின் புதிய மற்றும் பழைய அற்புதங்கள்

cri
ராஜா.....சீனப் பெருஞ்சுவர் அதிகாரப்பூர்வமாக "உலகின் 7 புதிய அற்புதங்களில்"ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. புதிய பழைய 7 உலக அற்புதங்கள் யாவை. இது பற்றி எடுத்து கூறலாமா?

கலை....ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ரோம் ஏகாதியபதிய காலத்தில் வாழ்ந்த கலையிலக்கிய அறிஞரும் கட்டிடக கலை நிபுணருமான பீஃலுன் உலகின் 7 அற்புதங்களை பட்டியலிட்டார். அவர்தான் உலகில் இவ்வாறு முதலில் தொகுத்தவர்.

எகிப்து மிரமிடு

ராஜா..... அவர் எந்த 7 அற்புதங்களை குறிப்பிட்டார்.

கலை.....அவர் குறிப்பிட்ட அற்புதங்களில் எகிப்து பிரமிடு, அலெக்சாந்தர் கலங்கரை விளக்கு, பண்டைய பாபிலோன் தொங்கு தோட்டம், பண்டைய கிரேக்க வீனஸ் கடவுள் சிலை, ரோட் தீவு மாபெரும் மனித சிலை, துருக்கி நாட்டின் மொசுலாஸ் கல்லறை, துருக்கியின் ஆல்சினீஸ் கோயில் என்பனவாகும்.

ராஜா....எதற்காக பிரமிடு தவிர, மற்ற அனைத்தும் இப்போது காணப்பட வில்லை ஏன்?

கலை......இயற்கை மாற்றம், போர், வேண்டுமென்றே அழிவு செய்தல் ஆகிய காரணங்களால் அவை இப்போது இல்லை.

ராஜா.....அப்புறம், இந்த பழைய 7 அற்புதங்கள் எங்கே இருந்தன?

கலை.....அவை மத்திய தரை கடலோரத்தில் இருந்தன.

ராஜா....நிகழ்ச்சியின் துவக்கத்தில் நாம் 7 பழைய மற்றும் புதிய உலக அற்புதங்கள் பற்றி குறிப்பிட்டோம். புதிய 7 உலக அற்புதங்கள் யாவை.

கலை......2000ம் ஆண்டில் "7 புதிய அற்புதங்கள் நிதியம்"என்னும் ஸவிசர்லாந்து சர்வதேச பண்பாட்டு பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டது. அதன் தலைமையில் 7 புதிய அற்புதங்கள் பற்றி கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

 பண்டைய கிரேக்க வீனஸ் கடவுள் சிலை

ராஜா....அதன் நோக்கம் என்ன?

கலை.....இந்த புவியில் பண்டைய சின்னங்களை பாதுகாக்கும் உணர்வை வலுப்படுத்துவது அதன் நோக்கமாகும்.

ராஜா.....இந்த 7 அற்புதங்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டன.

கலை.... இணையத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டது.

ராஜா.....இவ்வாண்டில் கடைசி தேர்வுப் போட்டிக்காக எத்தனை கட்டிடங்கள் போட்டி பட்டியலில் சேர்க்கப்பட்டன.

துருக்கி நாட்டின் மொசுலாஸ் கல்லறை

கலை.....21.

ராஜா.....அது பற்றி விளக்கலாமா?

கலை.....சீனாவின் பெருஞ்சுவர், அமெரிக்காவின் நியுயர்க் நகரில் அமைந்த சுதந்திர தேவி சிலை, பாரிஸிலுள்ள ஈபெஃல் கோபுரம், ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி இசை நாடக அரங்கம் முதலிய 21 உலகின் புகழ்பெற்ற கட்டிடங்கள் பரிந்துரை செய்யப்பட்டன.

ராஜா......தற்போது அவற்றை தேர்வு முயற்சி நடைபெறுகின்றதா?

கலை.....ஆமாம். அதற்காக உலகின் பல்வேறு நாடுகளிடமிருந்து வாக்குகளை வாங்க முயற்சிக்கப்படுகின்றது. அதன் முடிவு 2007ம் ஆண்டு ஜனவரி முதலாம் நாளில் மக்களுக்கு வெளியிடப்படும்.