ஒலிம்பிக் திடல்களும் அரங்குகளும்
cri
2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கான திடல்களும் அரங்குகளும் இவ்வாண்டின் முற்பாதியில் பயணிகள் பார்ப்பதற்காகத் திறந்து விடப்படலாம் என்று பெய்ஜிங் மாநகராட்சி சுற்றுலா பணியகத்தின் தலைவர் Du Jiang கூறியுள்ளார். இன்று பெய்ஜிங்கில் துவங்கிய பெய்ஜிங் சர்வதேச சுற்றுலா பொருட்காட்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய விளையாட்டு அரங்கும், தேசிய நீச்சல் மையமும் பார்வையாளர்களுக்கு திறந்து விடப்படும் என்றார். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்வதோடு, கட்டுமானப் பணி பாதிக்கப்படாமல் உறுதி செய்யப்படும் என்று அவர் கூறினார்.
|
|