சீனாவில் தொழிற்துறை லாபம்
cri
இவ்வாண்டின் முதல் ஐந்து திங்களில், சீனாவில் அனைத்து அரசு சார் தொழில் நிறுவனங்களும், ஆண்டுக்கு 50 லட்சம் யுவானுக்கு மேல் விற்றுவரவு நடத்தும் தனியார் தொழில் நிறுவனங்களும் சுமார் 63 ஆயிரம் கோடி யுவான் லாபம் ஈட்டியுள்ளன. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 25 விழுக்காடு அதிகமாகும் என்று சீனத் தேசிய புள்ளி விபர பணியகம் இன்று வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. முதல் ஐந்து திங்களில், எண்ணெய் மற்றும் இயற்கை வாயு அகழ்வு, இரும்பற்ற உலோகம் உருக்குதல், போக்குவரத்து சாதன தயாரிப்பு உள்ளிட்ட 39 தொழில்கள் அதிக லாபம் தந்தன.
|
|