சீனாவில் சிங்காய்-திபெத் ரயில் பாதை கட்டிமுடிக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கிய பின், திபெத்தில் போக்குவரத்து வசதிகளின் பின்தங்கிய நிலைமையில் அடிப்படை மாற்றம் ஏற்படும் என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் Jiang Yu அம்மையார் கூறியுள்ளார். இன்று பெய்ஜிங்கில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், இந்த ரயில் பாதை கட்டிமுடிக்கப்பட்டு போக்குவரத்து தொடங்குவது, மேற்கு பகுதியின் வளர்ச்சிக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். திபெத்தில் போக்குவரத்து வசதிகளின் பின்தங்கிய நிலைமையை இது அடியோடு மாற்றிவிடும் என்றும், திபெத்தில் பல்வேறு தேசிய இனங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்றும் கூறினார். பெரும் பகுதி சரக்குகள் ரயில் பாதை மூலம் திபெத்திற்கு நுழைந்து, அங்கிருந்து வெளியேறுவதினால், சரக்குக்கட்டணம் பெரிதும் குறையும். திபெத் சுற்றுலா தொழிலும் வளர்ச்சி அடையும் என்று அவர் தெரிவித்தார்.
|