
பெய்சிங் 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் துவங்குவதற்கு இன்னும் 777 நாட்கள் உள்ள நிலையில், பெய்சிங்கின் பெருஞ்சுவரின் Badaling என்னும் பகுதியின் அடிவாரத்தில், ஒலிம்பிக் பண்பாட்டு விழா துவக்கப்பட்டது. அங்கு ஒலிம்பிக் போட்டி கருப்பொருள் முழக்கம் பொறிக்கப்பட்ட பெரிய பதாகை வைக்கப்பட்டுள்ளது.

வரும் நாட்களில், ஒலிம்பிக் கருப்பொருளை விளக்கும் 28 பெரிய நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பொது மக்கள் பண்பாட்டு மற்றும் விளையாட்டு, ஒலிம்பிக் பண்பாட்டு சதுக்கம், கலை அரங்கேற்றம் முதலியவை இவற்றில் அடங்கும்.
|