• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-26 17:20:28    
சீன பதிப்பகத்துறையின் வளர்ச்சி

cri

இப்பொழுது சீனாவின் புத்தக கடைக்குச் சென்றால், சீனாவில் வெளியிடப்பட்ட நூல்களின் வகை மென்மேலும் அதிகமாகி விட்டதைக் காணலாம். பண்பாடு, வரலாறு, சமூக அறிவியல், தொழில் நுட்பம், வாழ்வு, பொது அறிவு முதலியவை இதில் இடம்பெற்றுள்ளன. முதியோருக்கான உடல் நலம் பற்றிய நூல்களும், பெற்றோருக்கான குழந்தை வளர்ப்பு பற்றிய நூல்களும், குழந்தைக்களுக்கான கற்பனைக்கதைகள் சித்திரக்கதை முதலிய நூல்களும் உள்ளன. சீனாவின் நூல் சந்தை முன்கண்டிராத வளர்ச்சியை அடைந்துள்ளது.

பெய்ஜிங் நூல் அங்காடி, சீனாவில் பெரிய ரக புத்தகக் கடைகளில் ஒன்றாகும். நாள்தோறும், இங்கே வாடிக்கையாளர்கள் நிறைந்து காணப்படுகிறார்கள். இங்கே நூல்களை வாங்குவதுடன், நூல் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை மக்கள் உணர்கின்றனர்.

எமது செய்தியாளரிடம் பேசிய வாங் ஹெங், தற்போதைய நூல்களின் சிப்பம், முன்பை விட, முற்றிலும் வேறுப்பட்டது என்றார். அவர் கூறியதாவது:

பெரிய முன்னேற்றமடைந்தது. அச்சடிப்பில் மாபெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. எழுத்துக்கள் தெளிவாக இருந்தன. சிப்பங்கள் அழகாக இருக்கின்றன என்றார் அவர்.

தற்போது நூல்களின் வகை மிகவும் அதிகம். பெய்ஜிங் நூல் மாளி்கையில் எந்தெந்த வகை நூல்களையும் வாங்க முடியும் என்று வாசகர் லீ அம்மையார் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளில், பெய்ஜிங் நூல் அங்காடியின் விற்பனை, ஆண்டுக்கு 20 விழுக்காடு என்ற வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் அதன் விற்பனையின் மொத்த தொகை, 44 கோடி யுவானை எட்டியுள்ளது. புள்ளிவிபரத்தின் படி, கடந்த ஆண்டில், சீனாவில் 2 லட்சத்து 20 ஆயிரம் வகைக்கு அதிகமான நூல்கள் வெளியிடப்பட்டன. 2004ம் ஆண்டின் இருந்ததை விட, இது சுமார் 8 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது, 1978ம் ஆண்டில் இருந்ததை விட சுமார் 10 மடங்கு அதிகமாகும்.

கடந்த நூற்றாண்டின் 80ம் ஆண்டுகள் முதல் 90ம் ஆண்டுகள் வரை, சீனாவின் பல்வேறு இடங்களில் இருந்த நிலையை விட, தற்போது நூல் சந்தை வளர்ச்சியடைந்துள்ளது. அக்காலத்தில், சீனாவின் வெளியீட்டு நிலையங்கள், நலன் பெறுவதை நோக்கமாக கொள்ளாத வாரியங்களாகும். அவை வழங்கிய வெளியீடுகள், வாசகர்களின் தேவையை நிறைவு செய்ய முடிய வில்லை.

சந்தைப் பொருளாதார வளர்ச்சியின் தேவைக்கு ஏற்ப, கடந்த நூற்றாண்டின் இறுதி முதல், சீன பதிப்பகத்துறை, சந்தைமயமாக்க சீர்திருத்தம் துவக்கப்பட்டுள்ளது. சீர்திருத்தத்துடன், சீனாவின் நூல் பதிப்பக வாரியங்கள், தொடர்ந்து அமைப்பு முறையை மாற்றி, சந்தையில் முக்கிய இடம்பெற்றன. இதனால், சந்தை போட்டியாற்றலுடைய பதிப்பகத் தொழில் நிறுவனங்கள் ஏற்பட்டுள்ளன. 2002ம் ஆண்டில், சுமார் 10 பதிப்பு வாரியங்கள் கொண்ட சீனாவின் மிகப்பெரிய பதிப்பு தொழில் நிறுவனமான சீனப் பதிப்பு குழுமம் அதிகாரப்பூர்மாக நிறுவப்பட்டது. இக்குழுமத்தின் ஆளுனர் யாங் மு சி எமது செய்தியாளரிடம் கூறியதாவது:

அமைப்பு முறையை மாற்றி, துடிப்புடன் கூடிய கூட்டாண்மையை உருவாக்குவது, இக்குழுமம் உருவாக்கப்பட்டதன் குறிக்கோளாகும். மூன்று அல்லது ஐந்து ஆண்டு முயற்சி மூலம், இக்குழுமம், வெளியீட்டுத்துறையில் அதிக செல்வாக்கு உடைய நிறுவனமாக மாற வேண்டும் என்றார் அவர்.

பதிப்பு மூலவள மிக்க இக்குழுமம், சந்தையில் நுழைந்த பிறகு, தலைச்சிறந்த நூல்கள் பலவற்றை வெளியிட்டுள்ளது. தற்போது, சீனப் பதிப்பு சந்தையில், அது 7 விழுக்காட்டுக்கு மேல் வகித்துள்ளது.

சீனப்பதிப்பு குழுமத்தைப் போன்று, சீர்திருத்தத்தால் சீனாவின் பல புதிய ரக பதிப்பு தொழில் நிறுவனங்கள், சந்தையில் தெம்பையும் போட்டியாற்றலையும் காட்டியுள்ளன. சீன நூல் விற்பனை சந்தை அறிக்கையின் படி, சீனப் பதிப்பு குழுமம், லியேள நிங் மாநிலத்தின் பதிப்பு குழுமம், ஷாங்காய் நூற்றாண்டு பதிப்பு தொழில் நிறுவனம், அறிவியல் பதிப்பு குழுமம் உள்ளிட்ட சீனாவின் ஏழு பதிப்பு தொழில் நிறுவனங்களின் ஆண்டு சராசரி சொத்து அதிகரிப்பு, 24 விழுக்காட்டை எட்டியுள்ளது.

அமைப்பு முறையின் புத்தாக்கமும், நாட்டின் முன்னுரிமை கொள்கைகளும் இந்தப் பதிப்பகத் தொழில் நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சியடைவதற்கு காரணங்களாகும். அமைப்பு முறை சீர்திருத்ததால், குழுமத்தின் வளர்ச்சியில் மேலும் பெரிய தெம்பு ஏற்பட்டுள்ளது என்று, லியேள நிங் மாநிலத்தின் பதிப்பு குழுமத்தின் தலைவர் ரென் ஹுவே யீங் கருத்து தெரிவித்தார்.

சீனாவின் புதிய ரக பதிப்பகத் தொழில் நிறுவனங்கள் உள்நாட்டில் வளர்வதுடன் வெளிநாட்டில் செயல்படுவது" என்ற நெடுநோக்கு திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன. ஆண்டுக்கு ஒரு முறையான புரென்க்பொத் நூல் பொருட்காட்சி தற்போது உலகளவில் மிக பெரிய நூல் பொருட்காட்சியாகவும், பதிப்புரிமை வர்த்தக சந்தையாகவும் இருக்கிறது. இவ்வாண்டு, 200க்கு கூடுதாலனோர் கொண்ட சீனப் பதிப்பகத்துறையின் பிரதிநிதிக்குழு, சுமார் 10 ஆயிரம் வகை நூல்களைக் கொண்டு இப்பொருட்காட்சியில் கலந்துகொண்டுள்ளது. இதில் 2000 வகைக்கு அதிகமான ஆங்கில மொழி மற்றும் சீன-ஆங்கில இரு மொழி நூல்கள் வைக்கப்பட்டன.

முந்திய நூல் பொருட்காட்சியில், சீனா நூல் பதிப்புரிமை இறக்குமதி எண்ணிக்கை, பதிப்புரிமை ஏற்றுமதியை விட, 10 மடங்கு ஆகும். ஆனால், இவ்வாண்டின் பொருட்காட்சியில், சீனப் பிரதிநிதிக்குழு, 881 பதிப்புரிமைகளை இறக்குமதி செய்து, 615 பதிப்புரிமைகளை ஏற்றுமதி செய்துள்ளது. சர்வதேச சந்தையில் சீன நூல்கள் பெற்றுள்ள இடங்கள் உயர்ந்துள்ளன.

இதுக்குறித்து, சீனத் தேசியச் செய்தி மற்றும் வெளியீட்டு அலுவலகத்தின் கொள்கை மற்றும் சட்ட விதிப்பிரிவின் தலைவர் வாங் தேள கூறியதாவது:

சீர்திருத்தம் மற்றும் புதுப்பிப்பு மூலம், திறமை வலுப்படுத்தப்பட்டுள்ளதை, பதிப்புரிமை வர்த்தக விகிதாசாரத்தில் ஏற்பட்ட இந்த மகிழ்ச்சியூட்டும் மாற்றம் பிரதிப்பலித்துள்ளது என்றார் அவர்.

கடந்த பத்து ஆண்டுகளில், சீனாவின் பதிப்பகத் துறை, திட்டப் பொருளாதாரத்திலிருந்து சந்தைப்பொருளாதார அமைப்புக்கான மாற்றத்தை நனவாக்கியுள்ளது. இம்மாற்றத்தில், சீனப் பதிப்பகத்துறையின் வளர்ச்சியையும் நூல் சந்தையின் வளத்தையும் பார்த்துள்ளோம்.