• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Wednesday    may 7th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-26 20:26:20    
பலவிதமான விசித்திர ஹோட்டல்கள்

cri

நீர் கோபுர ஹோட்டல்

19ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நீர் கோபுரம் ஒன்று ஐரோப்பாவின் மிக உயரமான நீர் கோபுரமாக விளங்கியது. 15 ஆண்டுகளுக்கு முன் அது ஹோட்டலாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பழைய கட்டிட பாணியுடன் கட்டப்பட்ட இந்த ஹோட்டல் நவீன வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. அறைகள் மிகவும் சிறியதாக இருந்த போதிலும் அவை ஆடம்பரமானவை. நீர் கோபுரத்தின் 11வது மாடி, உணவகமாக கட்டப்பட்டது. சுற்று பயணிகள் அங்கு உணவு உண்ணும் அதே வேளையில் அழகான இயற்கை காட்சியையும் கண்டுகளிக்கலாம்.

நூலக ஹோட்டல்

இந்த ஹோட்டல் நியூயார்க்கின் புகழ்பெற்ற மேடிசன் வீதியில் உள்ள அரசு நூலகத்தின் முதலாவது மாடியில் அமைந்துள்ளது. இந்த விசித்திரமான ஹோட்டலில் நீங்கள் தங்கினால், அங்குள்ள ஆறாயிரத்துக்கும் அதிகமான நூல்களை படிக்கலாம். அறையில் மட்டுமல்ல, வரவேற்பகத்திலும் உணவகங்களிலும் நூல்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. மன்ஹாட்டன் வீதி காட்சியைக் கண்டுமகிழும் அதே வேளையில் ஒரு கவிதை தொகுதியையும் படிக்கலாம்.

குழந்தை ஹோட்டல்

லண்டனில் பல்வகை ஹோட்டல்கள் உண்டு. அவற்றில் PIPPA-POP-INS ஹோட்டல் தனிச்சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், 12 வயதுக்குப்பட்ட குழந்தைகள் மட்டுமே இதில் தங்கலாம். பகலில் இதற்கும் வேறு நர்சரி பள்ளிகளுக்குமிடையில் வித்தியாசமில்லை. ஆனால், இரவில், குழந்தைகள் இங்கு தங்கலாம். அறையில் பல்வகை விளையாட்டுப் பொம்மைகள் உண்டு. குழந்தைகளுக்கு பல்வகை விளையாட்டுகளை ஹோட்டல் ஏற்பாடு செய்து வழங்குகிறது. நித்திரைக்கு முன் கதைகள் சொல்வதும் உண்டு.

கடலடி ஹோட்டல்

புரோலிடா மாநிலத்தில் கடலடி ஹோட்டல் ஒன்று உள்ளது. நீங்கள் அதில் தங்கினால் ஒரு செட் நீர் மூழ்கி கருவிகளைப் பெற்றுக்கொள்ளலாம். ஏனெனில் அறையில் தங்க வேண்டுமாயின் முதன்முதலாக நீரில் மூழ்க வேண்டும். இந்த நீர் மூழ்கி கப்பலுக்குள் இரண்டு படுக்கை அறைகள் உண்டு. அறையில் தொலைக்காட்சி பெட்டியும் தி.வி.தி சாதனமும் உண்டு. சன்னல் மூலம், வெளியே நீந்தி செல்லும் வெப்ப மண்டல மீன்களைக் கண்டு ரசிப்பது, தலைசிறந்த பொழுது போக்காகும்.

உப்பு ஹோட்டல்

பொலிவியாவின் உருன்னியல் உப்பு வளம் மிகவும் அதிகம். இங்கு உப்பு ஹோட்டல் கட்டப்பட்டுள்ளமை வேடிக்கையானது. ஹோட்டல் படுகைகள், மேசைகள், நாற்காலிகள், சுவர்கள், கூரை முகடுகள் அனைத்தும் உப்புகளால் உருவாக்கப்பட்டவை. கழிப்பறையுடன் கூடிய தரமான அறைகள் 30வும், அரசு தலைவர் செட் அறைகள் இரண்டும் உண்டு. எல்லையில்லா உப்பு வயலில் நீங்கள் வெண்முகல்களையும் வெண்மையான பூமியையும் கண்டு களிக்கலாம்.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040