• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-26 20:49:50    
புது வகை நோய்கள் தாக்கும் அபாயம்

cri

நமது தாத்தா பாட்டி காலத்தில், அல்லது நமது பெற்றோர்களின் தாத்தா பாட்டி காலத்தில், காய்ச்சல் உட்பட எந்த நோய் வந்தாலும் கிராமங்களில் வைத்தியர் தரும் பச்சிலை, சூரணம் இதுதான் அன்றைய சிகிச்சை மருத்துவம். ஆனால் இன்று மருந்து மாத்திரை, உடலில் ஒரு சிறு வெட்டுக்கூட இல்லாமல் அறுவை சிகிச்சை என்று இன்றைக்கு மருத்துவ வசதிகளும், நவீன தொழில்நுட்பங்களும் முன்னேற்றம் அடைந்துள்ளன. ஆனால் இன்றைக்கு உள்ள நோய்களைப் போல் நமது தாத்தா பாட்டி காலத்தில் இவ்வளவு வகையான நோய்கள் இல்லை என்று தான் கூறவேண்டும். சில நோய்கள் புதிதாக இனம் காணப்படுகின்றன, கண்டுபிடிக்கப்படுகின்றன, மேலும் சில புதியதாக உருவாகி மருத்துவ அறிவியலுக்கு தலைவலியும் சவாலும் தொடுக்கின்றன. கொடிய நோய்களின் பாதிப்புகளை ஆய்வு செய்த சீன அறிவியலர்கள் புதியதாக நோய் பரவல்கள் திடீரென ஏற்படும் சாத்தியங்களை,இவற்றை ஏற்படுத்தக்கூடிய காரணிகளை கண்டறிந்துள்ளனர்.

ஒரு சின்ன மென்மையான பாக்டீரியா பார்ப்பதற்கு தீங்கற்றதாக தெரியலாம் ஆனால் அது மனிதர்களிடையே மரணத்தை ஏற்படுத்தும், புதுவகை தொற்றுநோயின் மூல காரணியாகவும் மாறக்கூடும் என்று எச்சரிக்கிறார், சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிவியலரான யூ டாங்ஷெங்.

சார்ஸ், பறவைக் காய்ச்சல், பிக் பேக்டீரியம் ஆகிய நோய்களை உருவாக்கும் வைரஸ் மற்றும் பேக்டிரீயாக்கள் இந்த புதுவகை நோய்தொற்றுகளின் உதாரணங்கள், என்று கடந்த திங்களில் பெய்சிங்கில் நடைபெற்ற சர்வதேச கூட்டமொன்றில் யூ டாங்ஷெங் குறிப்பிட்டார்.

மரபணுக்களிலான மாற்றம், சுற்றுச் சூழல் மாற்றங்கள் மற்றும் மக்களிடையே கூடுதலான தொடர்புகள் இவையனைத்தும் புதுவகை பாக்டீரீயாக்கள், வைரஸ்களால் உருவாகும் தொற்று நோய் ஏற்பட காரணமாக அமையலாம் என்பதாக அவர் சின டைல்ய் என்ற நாளேட்டிற்கான பேட்டியில் குறிப்புட்டார்.

பறவைக் காய்ச்சல் ஏற்படுத்தும் கிருமியான எஹ்5 என்1 வைரஸ் அடுத்த மிகப்பெரிய பரவலான தொற்றுநோயை ஏற்படுத்தும் வைரஸ் என்று உலக சுகாதார அமைப்பால் கருதப்படுகிறது. ஆனால் சீன அறிவியலர் யூ டாங்ஷெங்கின் கருத்துப்படி, மேலும் கூடுதலான, அறிவியலர்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட நுண்கிருமிகள் தங்களது தாக்குதல்களை தொடுக்க தயாராக இருக்கக்கூடும். அத்தகைய ஒரு கிருமி, பிக் பேக்டீரியம் எனப்படும் நோயை உருவாக்கும் நீண்ட காலமாக தீங்கற்றதாக கருதப்பட்ட ஸ்ட்ரெப்டோகாக்கஸ் சுயிஸ் பேக்டீரியா என்கிறார் யூ.

கடந்த ஆண்டு ஜூலை திங்களில் இந்த நோய் கிருமி பரவி சீனாவின் தென்மேற்குப் பகுதி சிச்சுவான் மாநிலத்தில் 200 பேர் பாதிக்கப்பட்டு அதில் 38 பேர் பலியாகினர். இந்த பேக்டீரியாவைப் பற்றிய தங்களது ஆய்வுகளை பிலோஸ் மெடிசின் என்ற பிரபலமான இதழில் கடந்த ஏப்ரல் திங்களில் சீன அறிவியலர்கள் வெளியிட்டனர். நான்சிங் மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் மூத்த ஆய்வாளரான டாங் சியாச்சியின் கருத்துப்படி இந்த பேக்டீரியாவின் கூடுதலான வீரியம், உயிர்பலிகொள்ளும் தன்மை அதன் மரபணு மாற்றத்தால் ஏற்படும் எனப்படுகிறது. இந்த ஆய்வுகளின்படி இந்த பேக்டீரியா பரவலான தொற்றாக மாறும் வாய்ப்பு உள்ளது. சிச்சுவான் மாநிலத்தில் ஏற்பட்ட நோய்த் தொற்றுப்பரவல் 1998ல் ஜியாங்சு மாநிலத்தில் 25 பேருக்கு பரவி 14 பேர் உயிரிழந்த சம்பவதைப் போன்றே அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த இரு சம்பவங்களில் இவற்றின் பெரிய அளவிலான தொற்று மற்றும் அதிக உயிரிழப்பு விகிதம் ஆகியவை சீனாவில் கடந்த 1968ல் ஏற்பட்ட இந்த நோய் தொற்றின் நிலையை விட முற்றிலும் மாறுபட்டது காரணம் இந்த ஸ்ட்ரெப்டோகாக்கஸ் சுயிஸ் பேக்டீரியா அப்போது 200 பேருக்கு பரவியதில் 20க்கும் குறைவானவர்களே உயிரிழந்தனர்.

முந்தைய மனித தொற்றுகள் மெனிங்கைட்டிஸ் எனப்படும் மூளைக்காய்ச்சல், செப்டைஸ்மியா எனப்படும் ரத்த விஷமேறல் ஆகியவற்றை கொண்டதாக அமைந்தன. என்றாலும் இந்த சிச்சுவான் தொற்றின் போது , நோய் தொற்று ஏற்பட்ட பலரிடம் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் டாக்ஸிக் ஷாக் சின்ட்ரோம் (எஸ்.டி.எஸ்.எஸ்) எனப்படும் நோய் நிலையின் அறிகுறிகளை அறிவியலர்கள் கண்டனர். முந்தைய பிக் பேக்டீரியம் நோய் தொற்றுகளின் போது இந்த அறிகுறிகள் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எஸ்.டி.எஸ்.எஸ், ஸ்ட்ரெப்டோகாக்கஸ் டாக்ஸிக் ஷாக் சின்ட்ரோம் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் எனப்படும் பேக்டீரியத் தொற்றால் ஏற்படும் நோயாகும். இந்நோய் ரத்த அழுத்ததை விரைவாக தாழ்த்தி மனித உடலின் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் ஆகிய முக்கிய அவயங்களை செயலிழக்கச் செய்யும். பலவகை ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியாத் தொற்றுகள் எளிதாக ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகொண்டு மருத்துவம் செய்யக்கூடியவை. ஆனால் இந்த எஸ்.டி.எஸ்.எஸ் எனப்படும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் டாக்ஸிக் ஷாக் சின்ட்ரோமின் முன்னேற்ற நிலை கட்டுப்படுத்த கடினமானது, முடியாதது என்கிறார் டாங் ஜியாச்சி.

சிச்சுவான் மற்றும் சியாங்ஷு மாநிலங்களில் ஏற்பட்ட இந்த பிக் பேக்டீரியம் நோய் தொற்றின் பேக்டீரியாவினை மரபணு வரைபடத்தை கண்டறிந்துள்ளதாகவும், இதர விஷத்தன்மையுள்ள ஸ்ட்ரெப்டோகாக்கஸ் சுயிஸ் வகை பேக்டீரியாக்களுடன் ஒப்பிட்டு பார்த்தபோது சிச்சுவான், சியாங்ஷு தொற்றிலிருந்து எடுக்கப்பட்ட பேக்டீரியாவின் மரபணுவில், மற்ற ஸ்ட்ரெப்டோகாக்கஸ் சுயிஸ் வகை பேக்டீரியா மரபணுக்களில் உள்ள ஒரு தொகுதி காணப்படவில்லை என்றும், ஆனால் இந்த மரபணு மாற்றத்திற்கும் கூடுதலான விஷத்தன்மை அல்லது உயிரிழப்புத்தன்மைக்கு தொடர்புக்கு ஆதாரம் கிடைக்கவில்லை என்றும் டாங் ஜியாச்சி கூறியுள்ளார்.

கூடுதலான பன்றி வளர்ப்பு மற்றும் குறைவான சுகாதாரச் சூழல் இவை இந்த் அநோய் தொற்றுடன் நெருங்கிய தொடர்புகொண்டதாக அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

சுற்றுச்சூழலிலான மாற்றங்கள் மற்ரும் மனிதர்களின் உடல்நலனில் ஏற்படும் மாற்றங்கள், இந்த நோய் தொற்றுப்பரவலை தூண்டவும், நுன்னுயிர்களின் மரபணு மாற்றத்தை தூண்டவும் கூடும் என பெய்சிங் நுன்னுயிரியல் மற்றும் தொற்றுநோயியல் நிறுவனத்தின் ஆய்வு ஒன்று கூறுகிறது.

என்றாலும் இதில் நாம் மகிழ்ச்சியடைக் கூடிய ஒரு செய்தி என்னவென்றால், ஆய்வாளர்களின் கருத்துப்படி, நமக்கு தெரியாத நுன்னுயிர்களது தாக்குதல்கள் தடுக்க முடியாது என்றாலும், தவிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும். காரணம், இந்த இனம் தெரியாத நுன்னியிர்கள் பொதுவாக ஏற்கனவே உள்ள ஒரு நுன்னுயிரின் மரபணு மாற்றம் பெற்ற ஒன்றாகவே அமையும். இத்தகைய மாற்றங்கள் கூட காடழிப்பு உள்ளிட்ட இயற்கைச் சூழல் மாற்ற நகர்வுகளின் காரணமாகத்தான் சில சமயங்களில் ஏற்படுகின்றன. முதலில் ஆய்வாளர்கள் இந்த நுன்னுயிரிகளின் பரினாம வளர்ச்சியை அறிந்து, அதுவும் அணு அளவில் மிக நுண்ணிய ஆய்வுகளை மேற்கொண்டு, அவற்றின் தொற்றுப்பரவல் தாக்குதல்களை இனம் காணவேண்டும், அதன் மூலம் அதன் பரவலை தவிர்க்கலாம், என அறிவியலார் யூ டாங்ஷெங் கூறுகிறார்.