• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-27 18:20:53    
கீரை காளான் வறுவல்

cri

கலை......சரி, கீரைகலந்த காளான் கறி எப்படி சமைப்பது என்று சொல்லட்டமா?

ராஜா......நான் முதலில் சொல்லட்டுமா?

கலை......என்ன சொல்லப் போறீங்க?

ராஜா....முதலில் சந்தையில் விற்கப்படும் காளானை பயன்படுத்தலாமா?

கலை..... பச்சை காளான், அல்லது உலர்ந்த காளான் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். சுவை என்று பார்த்தால் நிலத்திலிருந்து பிடுஹ்கி உடனே சமைக்கப்படும் காளான் தான் சுவையானது.

ராஜா.....சரி சமைப்பது பற்றி சொல்லுங்கள்.

கலை.....காய்கறி சந்தையிலிருந்து வாங்கிய காளானை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். சில சமயங்களில் காளானுக்குள்ளே மணல் இருக்கும். அதை அப்படியே சமைத்து உங்கள் பல்லுக்கு உத்தரவாதம் தரமாட்டேன். அப்புறம் பூண்டு இஞ்சி ஆகியவற்றை சிறுசிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். கீரை நன்றாக கவுவி சுத்தம் செய்த பின் 3 சென்டி மீட்டர் நீளமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

அடுப்பின் மேல் வாணலியை வைத்து உணவு எண்ணெய் ஊற்றுங்கள். உணவு எண்ணெய் பாதி சூடானதும் பூண்டு இஞ்சி துண்டுகளை போட்டு கொஞ்சம் உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து வதக்குங்கள். பச்சை வாசணை மறைந்ததும் கீரை போட்டு கொஞ்சம் நேரம் வதக்க வேண்டும். அப்புறம் ஒரு தட்டின் நடுவில் கீரையை குவியலாக போடுங்கள்.

ராஜா.....கீரை தயாராகிவிட்டது. இனி காளான் எப்படி சமைப்பது?

கலை.....பொறுமையுடன் இருங்கள். வாணலியை கவுவிவிட்டு அடுப்பின் மேல் வைத்து உணவு எண்ணெய் விட்டு பாதி சூடானதும் பூண்டு துண்டுகளை வதக்கி சுவையான மணம் வந்ததும் காளான்களை போடுங்கள். கொஞ்சம் நேரம் வதக்கிய பிறகு மசாலாபொடி, சக்கரை, உப்பு ஆகியவற்றை போட்டு லேசாக கிளறிவிட வேண்டும். அப்புறம் வேகவைத்த உருளை கிழங்கை நீர்விட்டு பிசைந்து அந்த நீரை உள்ளே கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றுங்கள். நன்றாக வேக வைத்த பின் வெளியெடுத்து தட்டிலுள்ள கீரையின் மேல் போடுங்கள்.

ராஜா.....சுவையான காளான் கீரை கறி சமைக்கப்பட்டது.

கலை....அப்புறம் சுவை பார்ப்பது மட்டும்தான் நீங்கள் செய்ய வேண்டிய வேலை.

ராஜா....சரி நேயர்களே கீரைகலந்த காளான் கறி பற்றி இதுவரை கேட்டீர்கள். நீங்கள் செய்ய வேண்டியது இதை சமைத்து சுவைத்து பாருங்கள்.