• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-10 19:35:35    
பெருஞ்சுவரின் பிறப்பிடத்தில் கொண்டாட்ட விழா

cri

2008ஆம் ஆண்டில் 29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சீனாவின் தலைநகரான பெய்ச்சிங்கில் நடைபெறும். இது தொடர்புடைய சில நிகழ்ச்சிகளை வழங்கி நேயர்களிடம் அறிமுகப்படுத்துகிறோம்.

2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைக் கண்டுகளிக்கப் பெய்ச்சிங் வரத் திட்டமிடுவதாக ஜப்பானிய WASEDA பல்கலைக்கழகத்தில் பயிலும் 22 வயது மாணவர் KOGAITO YOSHIKI, பெய்ச்சிங் இளைஞர் சுற்றுலாப் பணியகமொன்றில் எமது செய்தியாளரிடம் கூறினார்.

அவர் மேலும் கூறுகின்றார், நான் கால்பந்து போட்டியைக் காணவும் பெருஞ்சுவரில் ஏறவும் பெய்ச்சிங் வாத்து இறைச்சியை உண்ணவும் விரும்புகின்றேன் என்றார்.

அவருடைய விருப்பம் நனவாகினால், 2008ஆம் ஆண்டு பெய்ச்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைக் கண்டுகளிக்கும் 2 லட்சத்து 60 ஆயிரம் ரசிகர்களில் ஒருவராக அவர் விளங்குவார்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் விளையாட்டு வீரர்களையும் அதிகாரிகளையும் சீனாவில் நுழையும் மற்றவர்களையும் சேர்த்தால் மொத்தம் 6 லட்சம் பேர் இருக்கும். கொண்டாட்ட விழாவில் கலந்துகொள்ள வெகு தூரத்திலிருந்து வரும் விருந்தினர்களை வரவேற்கவும் பெருஞ்சுவரின் பிறப்பிடத்தின் ஈர்ப்புத் தன்மையை அவர்கள் உணர்வதற்குத் துணை புரியவும் பெய்ச்சிங்கிலுள்ள சுற்றுலா பணியாளர்கள் ஆயத்தப்பணியைத் துவக்கியுள்ளனர்.

மேற்கூறிய இளைஞர் சுற்றுலா பணியகத்தின் மேலாளர் லீ பின் கூறியதாவது, 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைச் செவ்வனே வரவேற்பதற்காக, பணி அளவை விரிவாக்கி, இப்பயணிகளின் கோரிக்கையை நிறைவு செய்வோம். தற்போது எங்கள் ஹோட்டலில் 200 படுக்கைகள் உள்ளன.

2008ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 400 அல்லது 500ஐ எட்டப் பாடுபடுகிறோம். ஹோட்டல்களிலுள்ள வசதிகள், தற்போது இருப்பதை விட மேலும் மேம்படுத்தப்படும் என்றார். இந்த இளைஞர் ஹோட்டலைப் போல, பெய்ச்சிங்கிலுள்ள சில நட்சத்திர ஹோட்டல்களும் புணரமைக்கப்படவும், வசதிகள் முழுமையாக்கப்படவும் தொடங்கியுள்ளன என்றார்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைக் கண்டுகளிக்க வருகை தருவோரில் பெரும்பாலோர் குழுவாக வராததால், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்த விண்ணப்பித்த போது பெய்ச்சிங் அளித்த வாக்குறுதிக்கிணங்க, நட்சத்திர ஹோட்டல்களின் எண்ணிக்கை 800ஆக அதிகரிக்கப்படுவதோடு, இளைஞர் சுற்றுலா பணியகங்களும் குடும்ப விடுதிகளும் அதிகரிக்கப்படும்.

பயணிகளின் சுற்றுலாச் செலவைக் குறைப்பதே அதன் நோக்கம் ஆகும். வசிப்பிடம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தை முழுமையாக்குவது தவிர, பயணிகளுக்கு அதிகமான சுற்றுலா நெறிகளும் வழங்கப்படும்.

இதன் விளைவாக, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளைக் கண்டுகளிப்பது மட்டுமல்லாமல், ஓய்வு நேரத்தில் தொன்மை வாய்ந்த சீனாவையும் நேரடியாகக் கண்டு உணரலாம். பெய்ச்சிங் மாநகரச் சுற்றுலா பணியகத்தின் அதிகாரி வாங் சிங் கூறியதாவது,

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா, முடிவு விழா, விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றைக் கண்டு மகிழ்வதோடு, ஓய்வு நேரத்தில் 6 முக்கிய உலகப் பண்பாட்டு மரபுச்செல்வங்களான பெருஞ்சுவர், பெய்ச்சிங் அரண்மனை அருங்காட்சியகம், சொர்க்க கோயில், மின் வம்சக் கல்லறை, தின் வம்சக் கல்லறை முதலிய இடங்களையும் பார்வையிடலாம்.

தவிரவும், பெய்ச்சிங்கிலுள்ள பழமை வாய்ந்த பண்பாட்டையும் உணரலாம். எடுத்துக்காட்டாக, பெய்ச்சிங்கிலுள்ள குறுகிய வீதி-ஹுதொங்கில் சுற்றுலா மேற்கொள்ளலாம். பகலில் பெய்ச்சிங்கிலுள்ள சில பிரபல காட்சித்தலங்களுக்குச் சென்று பார்வையிடலாம்.

மதிய வேளையிலும் இரவிலும் பெய்ச்சிங் சிற்றுண்டியை உண்ணலாம். பெய்ச்சிங் ஒபெராவைக் கண்டுகளிக்கலாம். இரவில் வீதிகளில் பொது மக்களுடன் இணைந்து யியாங்க என்னும் நடனம் ஆடலாம் என்றார்.

சுற்றுலா வளம் மிகுந்த பெய்ச்சிங் மாநகரில் பெருஞ்சுவர், அரண்மனை அருங்காட்சியகம் உள்ளிட்ட உலகில் புகழ்பெற்ற மரபுச்செல்வங்களைத் தவிர, 130க்கும் அதிகமான அருங்காட்சியகங்களும் 270க்கும் மேற்பட்ட காட்சித் தலங்களும் உள்ளன.