• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-28 08:36:07    
நீண்ட ஆயுளின் ரகசியம்

cri
ஹங்சோ வட்டாரத்தின் ஆட்சித் தலைவராக பு ச்சுவான் செங் பதவி வகித்தபோது, அவரைக் காண ஒரு மந்திரவாதி வந்திருந்தார். அந்த மந்திரவாதிக்கு 90 வயதைத் தாண்டிவிட்டது. ஆனாலும் பால்மணம் மாறா பச்சிளம் குழந்தையைப்போல அவருடைய முகம் ஒளிர்ந்தது.

"இவ்வளவு தள்ளாத வயதிலும் இளமைத் துடிப்போடு இருக்காரே!" என்றுவியந்த வட்டார ஆட்சித் தலைவர் அவரை மரியாதையோடு வரவேற்று, அமரவைத்து பணிவுடன் கேட்டார்.

"ஐயா, கம்பூன்றி நடக்க வேண்டிய வயசிலும் கம்பீரமா நடந்து வர்றீங்க. உங்களுடைய இளமை மாறாத நீடித்த ஆயுளின் ரகசியம் என்ன?"

"அப்படியா? இளமையின் ரகசியம் தெரியணுமா?" என்று கேட்ட மந்திரவாதி ஒரு கணம் சிந்தித்துவிட்டு சொன்னார்.

"அதொண்ணும் ரொம்பப் பெரிய விஷயமில்லே. நான் வாழ்கிற மாதிரி வாழ்ந்தாலே போதும்."

"ஏதாவது பத்தியம் இருக்கணுமோ?"

"பத்தியம் எல்லாம் ஒண்ணும் இல்லே. என்ன வேணும்னாலும் நீங்க சாப்பிடலாம். குடிக்கலாம். ஆனா ஒண்ணு பொம்பளைங்க வாசனை மட்டும் ஆகாது. பெண்களை நெருங்கவிடாதீங்க."

மந்திரவாதி சொன்னதைக் கேட்டதும் ஆட்சித் தலைவரின் முகம் தொங்கிப் போனது.

"பெண் வாசனை ஆகாதுன்னா 1000 வருஷம் உயிரோபுருந்து என்ன லாபம்?" என்று முனங்கினார்.

ஒரே நோய்

ச்சாங் சுஸி என்ற மனிதனுக்கு எப்போதுமே விளம்பர ஆசை உண்டு. தன்னைப் பற்றியே மக்கள் பேச வேண்டும் என நினைத்தான். ஒருதடவை தனது பழைய கட்டிலை செப்பனிட்டு, வார்னிஷ் பூசி பளபளப்பாக்கினான். அதை ஊர்மக்கள்—குறிப்பாக தனது மனைவியின் குடும்பத்தினர் பார்க்க வேண்டும் என விரும்பினான். ஆனால் அவனுடைய படுக்கையறைக்குள் வந்து யாரும் கட்டிலைப் பார்க்கவில்லை. அப்போது ஒரு யோசனை உதித்தது. தனக்கு ஏதோ தீராத நோய் வந்து விட்டதாகச் சொல்லி படுத்த படுக்கையாகிவிட்டான். புதுப்பிக்கப்பட்ட கட்டிலில் படுத்துக்கிடந்த அவனை ஊர்மக்கள் வந்து பார்த்து ஆறுதல் சொல்லிச் சென்றனர். அவனுடைய மைத்துனன் யு யாங்ச்சியும் வந்தான். அவன் புதிதாக ஒரு காலுறை அணிந்திருந்தான். அதை அனைவரும் பார்த்து பாராட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டான். நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் தனது மாப்பிள்ளையைப் பார்க்க வந்தவன் நேராக கட்டில்மீது போய் உட்கார்ந்தான். கால் மேல் கால் போட்டான். காலுறை தெரியும்படியாக அங்கியை மடித்துவிட்டுக் கொண்டான். வேகமாக காலை ஆட்டியபடியே "சொல்லுடா மாப்பிளே, என்ன உடம்பு உனக்கு" என்று கேட்டான்.

ச்சாங் சுஸி அவனையே சிறிது நேரம் பார்த்துவிட்டு, புன்னகைத்தபடியே சொன்னான்.

"ஒண்ணுமில்லே மச்சான். நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே வியாதிதான்."